வழக்கமான ஒப்பாரி
இந்திய பொருளாதாரம் 5% சரிந்தது என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன உடனே அய்யய்யோ கோஷ்டிகள் வழக்கமான ஒப்பாரியுடன் கிளம்பிவிட்டன
சரி, இந்திய பொருளாதாரம் சரிந்திருக்கின்றது, சுற்றுபட்டியிலுள்ள 18 பட்டியில் யார் பொருளாதாரம் வளர்ந்திருக்கின்றது என கேட்டால் ஒரு பயலிடமும் பதில் இல்லை
சீனா 35% சரிவினை சந்தித்து 50 ஆண்டுகளில் மாபெரும் வீழ்ச்சியினை கண்டிருக்கின்றது
ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் வளர்ச்சியினை பதிவு செய்யவில்லை
எல்லா நாடும் சரிவதை போல இந்தியாவும் கொஞ்சம் தடுமாறியிருக்கின்றது , அதன் அண்டைநாடுகள் நிலை அதைவிட மகா மோசம்
இதை எல்லாம் சொன்னால் நம்மை சங்கி என்பார்கள் அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது
சரி இருக்கட்டும், திராவிட சமூக நீதி, திராவிட சிந்தாந்தம் என முழங்குபவர்களிடம் திராவிட பொருளாதார கொள்கை என எதுவென கேளுங்கள் சொல்ல தெரியாது
அவர்கள் அப்படித்தான் ராணுவம் பொருளாதாரம் என எதுவும் அவர்களுக்கு தெரியாது, எவனாவது பாதுகாப்பான் எவனாவது பொருளாதார கொள்கைகள் வகுத்து பொருள் சேர்க்க வழிசெய்வான்
அந்த பாதுகாப்பில் இருந்து கொண்டு அந்த சேர்த்த பொருளில் ஊழல் செய்வது மட்டும் அவர்களுக்கு தெரியும்
திராவிட பாதுகாப்பு மற்றும் பொருளாதார கொள்கை அதுதான்