வழக்கம் போல் குழப்புகிறார் கமல்

Image may contain: 1 person, on stage

காவிரிக்காகத் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் : கமலஹாசன்

ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் என சொன்னாரே அன்றி என்ன செய்யவேண்டும் என சொல்லவில்லை

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரச சட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம், பிரிட்டன் உற்பத்தி பொருளை வாங்கமாட்டோம் , எங்களுக்கு தேவையானதை நாங்களே செய்வோம் என இருந்தது

அக்காலமும் அக்கால வாழ்க்கை முறையும் காந்தியின் அழைப்பிற்கு ஒத்துழைத்தன‌

இன்று கோதுமை, கன்னட அரிசி, வடக்கத்திய பாசுமதி பிரியாணி, விமானம், ரயில், சாலை, தொலைபேசி, ஆடைகள் என ஏகபட்ட விஷயங்கள் உள்ள காலமிது

முக்கால்வாசி பொருட்கள் வடக்கே இருந்துதான் வருகின்றன, இதில் எதை புறக்கணித்து ஒத்துழையாமை இயக்கத்தை கமல் செய்யபோகின்றார் என தெரியவில்லை.

மத்திய அரசு ஊழியன் ஒருவனை வேலைக்கு செல்லமாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என சொல்ல வைக்க முடியுமா கமலஹாசன்?

இங்கே வாழ்க்கை ஓட்டம் கடுமையானது , ஒரு நாள் சம்பளம் இல்லாவிட்டாலும் கழுத்தை நெறிக்கும் காலமிது, ஒவ்வொருவனுக்கும் மாச கடைசியில் ஏகபட்ட பில்கள் காத்திருக்கின்றன‌

இதில் எவன் எதை புறக்கணித்துவிட்டு சத்தியாகிரகம் செய்வான்?

ஆக வழக்கம் போல் குழப்பிவிட்டார் கமல்

மிஸ்டர் கமலஹாசன் அப்படியே இந்த விஸ்வரூபம் படத்தையும் ஒத்துழையாமை விதிப்படி மக்கள் புறக்கணித்தால் என்னாகும்?

அதற்கு மட்டும் விதிவிலக்கு கொடுப்பீர்களா?


“ஊழலை ஒழிப்பதே கட்சியின் முதல் வேலை; உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்” : கமலஹாசன்

என்னது?

உடல் நலமும், மகளிர் நலனும் மய்யத்து கொள்கைகளா?

ஸ்ரீபிரியாவினை கட்சி மேடையில் வைத்துகொண்டு இப்படியா அறிவிப்பது?