வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்..

தொடக்கத்தில் இருந்தே திமுக என்பது சலம்பல் கட்சி, காலத்திற்கும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் சுத்தமாக பொருந்தாத வாதங்களை வைத்து வெட்டி அரசியல் செய்தது

வாய் சவுடாலும், சினிமாவுமே அதன் பலம்.. அதை வைத்து போராட்டங்களை தூண்டி ஏதோ செய்துகொண்டிருந்தது

அந்த அரசியலுக்கு பெரியாரிசம் திராவிடம் என சொல்லிகொண்டும் இருந்தது

பெரியார் இருந்தபொழுதே அவரை பிரிந்து அரசியல் நடத்திய திமுக பின்பற்றியது பெரியார் கொள்கை ஆம் சத்தியமாக அதுதான், ஏதாவது புரிகின்றதா? புரியாது.

ஒரு பிரச்சினைக்கும் அது முடிவு சொன்ன கட்சியும் அல்ல, தீர்த்து வைத்த கட்சியும் அல்ல‌

கிடைக்கும் சிக்கலில் எல்லாம் ஒப்பாரி வைத்தே வளர்ந்த கட்சி, சரி ஆட்சியில் அந்த சிக்கலை தீர்த்தார்களா என்றால் ஒருகாலமும் இல்லை

இவர்களின் வளர்ச்சியும் நிலைத்தன்மைக்கும் நேரு காட்டிய பெருந்தன்மையும் தமிழகத்தில் குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர் காட்டிய பெருந்தன்மையுமே காரணம்

அன்றே இவர்களை ஒடுக்கி அடக்கி இருக்க முடியும் ஆனால் பெருந்தன்மை மிக்க நேருவும், காமராஜரரும் அதை செய்யவில்லை

இவர்களை மொத்தமாக முடக்க பார்த்த இந்திரா, ஏக சிக்கல்களில் சிக்கினார் அதற்கு காரணம் சஞ்சய் காந்தி

இன்னொன்று அவர்களுக்கு ராம்சந்தர் எனும் சரியான தலைவலியினை உருவாக்கிவிட்டு ஓரமாக இருந்து ரசித்தார் இந்திரா..

ஆக நேருவின் பெருந்தன்மையாலும், சஞ்சய் இந்திராவுக்கு கொடுத்த தலைவலியாலும் இங்கு ஏதோ மோவோ, லெனின் இயக்கம் போல திரிந்ததது திமுக‌

பலவீனமான காங்கிரஸின் காலங்களிலும், அந்த பலவீனத்தில் மாநில கட்சிகள் ஆட்டம் போட்ட காலத்திலும் மந்தையின் கிடா போல கம்பீரமாக அது சுற்றி திரிந்தது

சவால் என அதற்கு எதுவுமில்லை

வரலாற்றிலே முதல் தடவையாக அது இறுக்கமும் பலமும் வாய்ந்த பாஜகவினை சந்திக்கின்றது

பழைய ஜாம்பவான்களும் இல்லா நிலையில் ஸ்டாலின், கனிமொழி ,சமீபத்தில் வாங்கிகட்டிய சரவணன் போன்றோரோடு அல்லாடுகின்றது

பழைய வழக்கு ஒன்றை தட்டினாலே காலத்துக்கும் சிறையில் அடைபடும் நிலையில் இருக்கும் வைகோவினை எல்லாம் திமுக களமிறக்கியிருப்பது சரியல்ல‌

(ஒருவேளை வைகோவினை இதைவிட பழிவாங்கமுடியாத திட்டமாக கூட இருக்கலாம்…)

முதல் முறையாக கடும் இறுக்கமான எதிரியினை சந்திக்கும் திமுக ஒரு மாதிரி ஆடுகின்றது, அதை பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கின்றது

நிச்சயம் பாஜகவின் இரும்பு பலம் முன்னாலும் அவர்கள் ஒருவித இறுக்கத்தோடு நகரும் நகர்வு முன்னாலும் திமுக தாக்குபிடிப்பது சிரமம்

மொரார்ஜி தேசாய் இந்திராவினை எதிர்க்க மாநில அளவில் வலுவான கட்சிகள் இருந்தன, அன்றைய திமுகவுக்கு அது அனுகூலமானது

இன்றைய திமுகவுக்கு அப்படி யாருமில்லை, கம்யூனிஸ்டுகளும் காலி

இஸ்லாமிய வோட்டு நமக்கு எக்காலமும் இல்லை என்றே காஷ்மீரில் ஆடிதீர்த்திருக்கின்றது பாஜக, ஒரு வகையில் அவர்களின் பலம் அது

அதே பாய்ச்சலை தமிழகத்திலும் அவர்கள் காட்டகூடும், இங்கும் பாஜகவுக்கு ஒரு மண்ணுமில்லை

இங்கு சில விஷயங்களை ஏவினால் பாஜக இழக்க ஒன்றுமில்லை ஆனால் எதிரிகளை எவ்வளவும் அடிக்கலாம் என்பது பாஜகவின் பெரும் பலம்

இதுவரை காணாத சவாலை சந்திக்கும் திமுக மனதிற்குள் ஒரு காலத்தில் எந்த நேரு, இந்திரா, காமராஜரை எதிர்த்தார்களோ அவர்களுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு அடுத்தகட்டத்துக்கு நகர்கின்றது

என்ன கட்டம்?

அந்த இம்சை அரசன் வடிவேலு, வல்லவராயனோடு மோதிய காட்சிதான்

வெள்ளைகொடி ஏந்தி “வல்லவராயே நாங்கள் வாழவேண்டுமய்யா…….” என்ற அந்த காட்சிதான்