வார இறுதி …..

st

Ready for jungle tracking 🙂

கடவுள் மகா நல்லவர்

வருமானம் போதவில்லை என‌
கேட்டபொழுதெல்லாம் செவிசாய்த்தார்

ஆனால்
வருமானம் கூட கூட‌
விலைவாசியும் கூடிற்று

மறுபடி மறுபடி கேட்க‌
கடவுளும் சளைக்காமல் கொடுத்தார்
விலைவாசியும் சளைக்காமல் முன்னேறியது

கேட்டு கேட்டு நான் களைத்தேன்
கொடுத்து கொடுத்து கடவுள் களைத்தார்
இப்போது இருவருக்கும் களைத்துவிட்டது.

இனி ஒரே கோரிக்கை,
ஒன்றே ஒன்றுதான்,

ஏ மகா நல்ல கடவுளே

அந்த‌ நோட்டு அடிக்கும் உரிமையினை
மட்டும் கொடுத்துவிடு

இருவருக்கும் பிரச்சினை இல்லை