வாழ்க நீ எம்மான், இத்தேசத்தின் கோமான்
நாம் இந்தியர், எந்த விஷயத்தையுமே நாட்டு நலன் என்ற கோணத்தில் அன்றி வேறு கோணத்தில் பார்ப்பதில்லை
எமக்கு நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மோடி என எல்லோரும் ஒரே வரிசையே
அதாவது இத்தேசத்திற்கு தனிபெரும் தலைவனாக ஒருவன் வர வேண்டும், தேசம் முழுக்க அறியபட்ட தலைவனாக இத்தேசத்தின் ஒருமைபாட்டை காக்க வேண்டும் என்பது எம் எண்ணம்
நாட்டுபற்று கொண்டோரின் எண்ணமும் அதுவே
அவ்வகையில் காங்கிரஸ் பின்னடைவது நாட்டுக்கு நல்லது அல்ல, மோடி எதிரியே இல்லா பிரதமராக அமர்வதும் சரியல்ல
மோடி எனும் தனிபெரும் தலைவனுக்கு இன்னொரு தனிபெரும் தலைவனே அரசியல் எதிர் சக்தியாக வரவேண்டும்
அவ்வகையில் ராகுல்காந்தி எப்பொழுதுமே எமக்கு அபிமானமிக்கவர்
பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர்
காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது.
இந்தியா என்பது யாராலும் அசைக்கமுடியா நாடு , என்றும் நிலைத்து நிற்கும் நாடு , இத்தேசத்தை வழிநடத்தும் ஆற்றலும் அக்கறையும் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி
இந்தியா எனும் யானையினை அந்த பாகனே வழிநடத்த முடியும், இல்லாவிட்டால் இத்தேசம் திசைமாறும்
அந்த கட்சியினை வழிநடத்தி செல்கின்றார், சுருக்கமாக சொன்னால் தேசத்தின் ஒரு எதிர்பார்ப்பு ராகுல்
பாட்டியோ, தந்தையோ இவருக்கு அரசியல் சொல்லிகொடுக்கவில்லை, அன்னையின் சில ஆசிகள் உண்டு, மற்றபடி தன்னை தானே செதுக்கி வளரும் தலைவர் அவர்
இந்தியா முழுக்க அறிபடுபவர், இந்திய ஒற்றுமையின் அடையாளாமாக , ஒரே இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிபடுகின்றார்
தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம், இன்னொரு நாளில் காங்கிரஸ் வெற்றிபெறும், அதுவும் இந்த பாஜக அரசு போகும் போக்கிற்கு கட்டாயம் நடக்கும்
அவரது பாட்டனும், பாட்டியும், தந்தையும் நாட்டிற்கு கொடுத்த உழைப்புகள் ஏராளம், பாட்டியும் தந்தையும் உயிரையே கொடுத்தவர்கள்
பாட்டியும், தந்தையும் எப்படி கொல்லபட்டார்கள் என தெரிந்தும், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இந்நாட்டிற்கு தொண்டாற்ற வந்து நிற்கும் ராகுலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்
பெரும் பலம்கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் என்பது வெடிகுண்டு மேல் நிற்கும் பதவி, உயிருக்கு துணிந்த தைரியம் வேண்டும். ராகுல் அதில் மிக தைரியமாக அமர்ந்திருக்கின்றார்
அக்குடும்பத்தின் வாரிசாக வந்து காங்கிரசையும், நாட்டையும் காத்து நிற்கின்றார் ராகுல்காந்தி, நிச்சயம் ஒருநாள் உச்சம் பெறுவார், காலமிருக்கின்றது
ராஜிவின் மறுபிறப்பாகவே அவரை இந்தியா காண்கின்றது, தந்தை இந்த மாபெரும் தேசத்திற்கு செய்ய நினைத்ததை எல்லாம் தனயன் செய்து முடிக்க வாழ்த்துவோம்.
நிச்சயம் ஒரு காலம் இந்தியா அவரால் புத்துயிர் பெரும், பெரும் வளர்ச்சி அடையும்.
இந்தியாவின் எதிர்ப்பார்ப்பு இனி அவர்தான், நிச்சயம் அவர்தான்,
இளைய பாரதம் அந்த ராகுல் தான். இந்தியா முழுக்க ஒருங்கிணைக்கும் ஒரு தலைவராக அவர் திகழ்வது இந்நாட்டிற்கு பெரும் பலம்
இந்த தேசத்தின் எதிர்காலமாக நம்பபடும் இரண்டாம் நேருவான ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும் ராகுல், மாபெரும் வெற்றியும் காலமும் உங்களை தேடிவரும்
அது தேசத்தின் பொற்காலமாய் அமையும், எம் மூதாட்டி அவ்வையார் சொல்வார்
“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா..”
அதாவது எவ்வளவு முயன்றாலும் ஒரு காரியம் ஆகும் நாளில்தான் ஆகும், உரிய காலம் வரும்பொழுதுதான் நடக்கும்
மரங்கள் பலன் கொடுக்க கூட உரிய காலம் வரவேண்டும், வளர்ந்துவிட்ட மரம் கூட காலம் வராமல் பலன் கொடுக்காது
அப்படி இது மோடியின் காலம், அவருக்கொரு காலமென்றால் உங்களுக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும்
அதுவரை காத்திருங்கள் மிஸ்டர் ராகுல் , தேசத்தோடு அதுவரை கலந்தே இருங்கள்
இந்தியா ஒருகாலம் உங்களை உச்சத்தி வைத்து செங்கோலை கையில் தரும், அதுவரை பொறுங்கள்
தேசத்தின் எதிர்காலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மிக்க பெருமை அடைகின்றோம்
ராஜிவும் இந்திராவும் பெறாத ஆயுளெல்லாம் சேர்ந்து அவர் வாழட்டும்
நேருவின் புகழைவிட மிஞ்சி அவர் வாழட்டும், அலகாபாத் அரண்மனை போல அவர் நின்று வாழட்டும்.
தேசமும் உலகமும் அவரை வாழ்த்துகின்றது
எங்கள் தங்க தலைவியோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகின்றோம்…
வாழ்க நீ எம்மான், இத்தேசத்தின் கோமான்
