வாழ்த்தி வணங்குகின்றது

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி.45 ரக ராக்கெட்

28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது, இதில்தான் இந்தியாவின் மாய கண்ணாண அந்த எமிசாட்டும் இருக்கின்றது

இந்த எமிசாட்டுக்குத்தான் அந்த செயற்கைகோள் ஏவுகனையினை இந்தியா சோதித்தது

மிக உயரத்தில் அதை நிலைநிறுத்தும்பொருட்டு இந்திய ராக்கெட் சென்று கொண்டிருக்கின்றது, விரைவில் நிலை நிறுத்தும்

28 செயற்கை கோளை சுமந்து செல்வது சாதாரண விஷயமல்ல, ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கிரையோஜனிக் நுட்பத்தை தர கூடாது என தடுத்த அமெரிக்காவின் செயற்கை கோளையும் இந்திய ராக்கெட் சுமந்து செல்கின்றது

அவ்வகையில் மாபெரும் வெற்றி இது

மாபெரும் சாதனையினை தேசம் செய்திருக்கின்றது அதற்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை தேசம் வாழ்த்தி வணங்குகின்றது