விகடன் திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது

விகடன் ஏடு திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது, அவர் என்னமோ உண்மை காந்தி என்பது போல வடிக்கின்றது

மே 17ல் கொல்லபட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க கூடாது என மக்கள் இதனிடம் சொல்கின்றார்களாம்,

திருமுருகன் தேசவிரோதி இல்லையாம், அரசியல்வாதிகளுக்கு எதிரியாம் ,, இப்படி மக்கள் விகடனிடம் அழுகின்றார்களாம்

பழனிச்சாமிக்கும் திருமுருகனுக்கும் சம்பந்தி விரோதமா? இல்லை கருவாட்டு வியாபார பிரச்சினை அல்லது வாய்க்கால் தகறாறா?

இந்தியாவில் தடை செய்யபட்ட இயக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதை தவிர திருமுருகன் என்ன செய்தார்?

புலிகளால் கொல்லபட்ட 1600 இந்திய வீரர்களுக்கான அஞ்சலி கூட்டம் நடத்தபடாமல் இதற்கு இனி பதிலளிக்க முடியாது

அதே மெரீனாவில் இலங்கையில் புலிகளுகளால் கொல்லபட்ட அந்த வீரர்களுக்கும், புலிகளால் சென்னையில் பத்மநாபாவோடும், ராஜீவோடும் கொல்லபட்ட தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்தபட வேண்டுமா வேண்டாமா?

அப்படிபட்ட வீர அஞ்சலிகளை தேசபக்திமிக்க இந்திய முன்னாள் ராணுவ வீரர்களோ, அல்லது தமிழக தேச பக்தர்களோ செய்தால் தடுக்க முடியுமா?

அப்படி பல லட்சம் பேர் இங்கு உண்டு, ஆனால் அமைதி காக்கின்றார்கள், இந்த 4 பேருக்கும் அதெல்லாம் தெரியாதா? முள்ளிவாய்க்கால் மட்டும்தான் விளக்கு பிடிப்பார்களா?

விகடனுக்கு நாம் சொல்வது ஒன்றுதான், இனி இம்மாதிரி அஞ்சலி செலுத்துபவர்கள், அந்த இந்திய வீரர்களுக்கும், அப்பாவி தமிழக தமிழர்களுக்கும், ராஜிவ்காந்திக்கும், பத்மநபாவிற்கும் அஞ்சலி செலுத்திவிட்டு பின் முள்ளிவாய்க்காலுக்கு அழட்டும் என எமது கருத்தையும் சொல்கின்றோம்.

இப்படிபட்ட கருத்துக்களை விகடன் ஏற்காமல், சும்மா 4 பேரிடம் சென்று இதுதான் தமிழக முடிவு என சொல்வது பெரும் மோசடி

பெரும் ஏமாற்றும் வித்தை, ஒரு பாரம்பரிமிக்க பத்திரிகை இப்படி செய்வதை ஏற்க முடியாது

எத்தனை ஆயிரம் இந்திய உயிர்கள் புலிகளால் கொல்லபட்டிருக்கின்றன என்பதை தாண்டி அல்லவா முள்ளிவாய்க்காலுக்கு செல்லவேண்டும்?

30 வருட கதையின் முடிவுரையினை மட்டும் பெரிதாக்குவது ஏன்? மற்ற விவகாரத்தை எல்லாம் மறைப்பது ஏன்? இதுவும் தேசதுரோகம் அல்லவா?

ஒரு பொறுப்பான பத்திரிகை இதனை செய்யலாமா?

ஆனால் விகடன் செய்கின்றது, அதனை எல்லாம் மறைக்கின்றது, சும்மா அரசியலுக்காக சிலர் சொல்லும், பாஜகவினை, தமிழக அரசினை குறை சொல்வதற்காக சிலர் போடும் நாடகங்களை அது திருமுருகனுக்கு ஆதரவு என கதை கட்டுகின்றது

மற்றபடி தமிழகத்தில் என்ன நடந்துவிட்டது? ஒன்றுமே இல்லை

உண்மையினை மறைத்து பொய்யினை பெரிதாக்கும் விகடனை வன்மையாக கண்டிக்கின்றோம்