விக்டர் பவுட்

உலகில் மிகபெரிய கவனத்தை பெற்றிருக்கும் விஷயம் அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய கைதி விக்டர் பவுட் என்பனை ரஷ்யா விடுதலை செய்ய கோரியது

அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் எதிரெதிர் தரப்பின் முக்கிய கைதிகள் சிக்குவார்கள், நேரம் பார்த்து இருவர் லாபத்தினை பொறுத்து பரிமாறவும் செய்வார்கள்

இப்பொழுது உக்ரைன் யுத்தமுஸ்தீப்பிலும் ரஷ்யா தங்களிடம் போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய அமெரிக்காவின் விளையாட்டு வீரர்களை விடுதலைசெய்ய முன்வந்து அப்படியே தங்கள் நாட்டு விக்டர் பவுட்டை கோருகின்றது

யார் இந்த விக்டர் பவுட் என்றால் சுமார் 18 ஆண்டுகள் உலகை கலக்கியவன், நாயகன் கமலஹாசனில் வரும் வசனம் போல “அவுக போகாத நாடு கிடையாது கடத்தாத பொருள் கிடையாது”

எனினும் விக்டரின் ஒரே தொழில் ஆயுத தரகர் அல்லது கடத்தல்

எல்லா தொழிலுக்கும் தரகர் உண்டு என்றாலும் ஆயுத கடத்தலில் சவால் அதிகம் ஆனால் லாபமும் மிக அதிகம்

1950களில் அன்றைய சோவியத் பகுதியான தஜிக்கிஸ்தானில் பிறந்தவன் அவன், இளம் வயதிலே சோவியத்தின் ராணுவத்துக்கு வந்தவன் அங்கு சோவியத் விமானபடை ஆர்மி என எல்லா இடத்திலும் சுற்றிவிட்டு பின் ராணுவ உளவுதுறை அப்படியே அன்றைய சோவியத் உளவு அமைப்பான கேஜிபியுடன் நல்ல தொடர்பில் இருந்தான்

அவனுக்கான காலம் 1991ல் தொடங்கிற்று

அப்பொழுது சோவியத் 17 நாடுகளாக சிதறி இருந்தது, அவர்கள் ஆயுதம் முதல் கப்பல் விமானம் என எதுவும் பங்குவைக்கபடவில்லை அல்லது வைத்தாலும் குழப்பம்

அதே நேரம் அமெரிக்கா ஒற்றை ஏகபோக நாடாகி குட்டி குட்டி நாடுகள் மேல் யுத்தம் தொடர்ந்தது, ஈராக் போன்ற யுத்தம் அப்படி

அப்பொழுது பல நாடுகளுக்கும் உலகெங்கும் இருந்த தீவிரவாதிகளுக்கும் பெரும் ஆயுதம் தேவைபட்டது அது முன்னாள் சோவியத் நாட்டின் கருப்பு சந்தையில் எளிதாக கிடைத்தது

அதை கொண்டு விற்பதில் கில்லாடியானான் விக்டர், குறிப்பாக ஆப்ரிக்காவில் பெரும் வைரத்துக்கு துப்பாக்கி வாங்கும் கோஷ்டி முதல் சில நாட்டு தீவிரவாதிகளுக்கு சி.ஐ.ஏ கொடுக்கும் ஆயுதம் வரை அவனே ராஜா

பணம் ஒன்றுக்காக எந்த ஆயுதத்தையும் எங்கிருந்தும் கடத்தும் சக்தி அவனுக்கிருந்தது, கப்பலோ விமானமோ படகோ மிக சமத்தாக கொண்டு சேர்த்துவிடுவான்

முன்னாள் சோவியத் நாடு என்றல்ல வடகொரியா போன்ற நாட்டின் ஆயுதங்களும் கள்ளசந்தையில் விற்க வந்தால் அவனை அணுகினால் உடனே முடியும்

விடுதலைபுலிகள் முதல் ஏகபட்ட இயக்கங்களுக்கு அவன் கொடுத்த ஆயுதம் கொஞ்சமல்ல, ஆப்ரிக்காவின் சில நாடுகள், தாய்லாந்து, இந்தோனேஷிய தீவுகள் தென்னமெரிக்க நகரங்கள் என எங்கெல்லாமோ கிளைபரப்பி நின்றான்

உலகில் தீவிரவாதம் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் சில நாட்டு உளவு அமைப்புக்களே அரசுகளே அவனை தொடர்பு கொண்டு ஆயுதம் கோரின‌

இப்படி அவன் செய்த கடத்தல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து தனக்கு ஏற்றதுபோல் பாவித்த அமெரிக்காவுக்கு சிக்கல் 2001க்கு பின் வந்தது

இனி உலகில் தீவிரவாதிகளே இருக்க கூடாது என அமெரிக்கா முடிவு செய்த நேரம் விக்டர் அடங்கவில்லை அவன் அடித்து விளையாடிகொண்டிருந்தான்

ஒரு காலத்தில் தாலிபன்களால் தங்களை விரட்டிய அமெரிக்காவினை எதிர்த்து அதே தாலிபனுக்கு ஆயுதங்களை அவன் அள்ளி கொடுத்தபொழுது அமெரிக்கா அவனை குறிவைத்தது

பல இடங்களில் விரித்த வலையில் இருந்து தப்பிய அவன் பின் 2008ல் தாய்லாந்தில் அமுக்கபட்டு அங்கிருந்து அமெரிக்கா கொண்டு செல்லபட்டான்

அவனிடம் ஏராளமான ரகசியம் உண்டு என்பதால் அவனை சுமார் 14 ஆண்டுகாலம் விசாரித்துகொண்டிருக்கன்றது அமெரிக்கா

இப்பொழுது அந்த விக்டோரைத்தான் புட்டீன் கேட்கின்றார், அமெரிக்காவும் அவனை விட்டுவிடலாமா என யோசிக்கின்றது

ஏன்?

என்னதான் அமெரிக்கா ரஷ்யா மோதல் என்றாலும் இருவருக்கும் பொதுவான விஷயம் ஆயுத வியாபாரம், அது நடக்க எங்காவது குழப்பம் வேண்டும், குழப்பத்துக்கு சிக்கல் இல்லை பல நாட்டு உளவுதுறைகளும் அவர்களின் கைகூலிகளுமே பார்த்துகொள்வார்கள்

ஆனால் சமத்தாக ஆயுதம் கொண்டு செல்ல யார் கிடைப்பார்? அதற்கு விக்டர் பவுட்விட்டால் ஆளே இல்லை

ஏதோ காரணங்களுக்காக அன்னார் வெளிவரலாம் என்கின்றார்கள், அவனின் கடத்தலும் சாகசமும் பலமுறை அவன் தப்பிய அதிரடிகளும் சுவாரஸ்யமானவை

உலகில் 18 ஆண்டுகள் ஆயுத கடத்தலில் கொடிகட்ட பறந்த அவன் மீண்டும் வெளிவரலாம், இப்பொழுது அவன் வெளிவரலாம் எனும் பேச்சு வந்த நிலையில் அவனின் ஜெகஜால கில்லாடிதனம் பற்றி வரும் தகவல்களை உங்களோடு பகிர்கின்றோம்

விடுதலை புலிகளுக்கும் அவன் ஆயுதம் கொடுத்த காலம் உண்டு, அதனால் இனி அவன் வெளிவரும் பொழுதுஇந்திய தமிழகத்தில் இருந்து ஒரு குரல் இப்படி வரும்

“நான் அண்ணன பார்க்க போயிருந்தப்ப ஒருத்தன் துப்பாக்கிய கழற்றி மாட்டிட்டு இருந்தான், என்னண்ணே மெக்கானிக்கெல்லாம் இங்க வச்சிருக்கீங்கண்ணு கேட்டேன்

தம்பி, இவன் விக்டர் பவுட் பெரிய ஆயுத வியாபாரி. எனக்கு பின்னாடி யுத்தம் நடத்த இவன் உதவி அவசியம்னு சொன்னாரு, அவன் இது யாருண்ணு கேட்டான்

என் தம்பி சீமான்னு அண்ணன் சொன்னாரு, என் வாரிசுன்னு சொன்னாரு, அவ்வளவுதான் என் கால்ல விழுந்து கும்பிட்டு…” புஹஹஹா புஹஹ்ஹா புஹஹஹஹா