விஜய் அட்லி கூட்டணி

பொதுவாக அட்லிபடம் என்றாலே ஒரு படத்து கதையினை சுட்டுவிட்டு 4 படத்தில் இருந்து காட்சிகளை சுட்டு எடுத்தால் முடிந்தது விஷயம்

இந்த பிகில் படம் சக்தே இன்டியா எனும் ஷாரூக்கான் படத்தையும் இறுதி சுற்று படத்தையும் கலந்து கிண்டியிருக்கும் அல்வா என்பது டிரைலரிலே தெரிகின்றது

ஹாக்கிக்கு பதிலாக கால்பந்து என்பதும், மாதவனுக்கு பதிலாக விஜய் என்பதும் புரிகின்றது, தாடியினை கூட சுடும் நிலைக்கு அட்லி வந்துவிட்டது சோகம்

என்ன செய்வது? வடக்கத்திய இயக்குநரும் இறுதிசுற்று இயக்குநரும் அட்லிக்காக உழைக்க வேண்டும் என்பது அவர்கள் தலைவிதி

ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் தமிழனுக்கும் கால்பந்திற்கும் வெகுதூரம். தமிழகத்தில் வடசென்னையில் மட்டுமே அது ஓரளவு உண்டு, வெள்ளையன் கோட்டையினை ஓட்டி உருவான பகுதி என்பதால் என்னவோ குத்துசண்டை, கால்பந்து போன்ற உலக விளையாட்டுக்களை அங்கு மட்டும்தான் காணமுடியும்

அந்த பகுதி கதைகளை எடுத்தால் அழகாக எடுக்கலாம், இந்த பா.ரஞ்சித் என்பவன் அதை எடுக்க சொன்னால் சாதியினை இழுத்து குழப்பி வைப்பான், ஆனா சுதா எனும் பெண் அந்த இறுதிசுற்று படத்தை அப்படி மிக அழகாக நுட்பமாக கொடுத்திருந்தார்

அவர் கட்டிய தேன்கூட்டில் இருந்து தேன் எடுத்துவிட்டது விஜய் அட்லி கூட்டணி

ஆனால் கால்பந்து என்பது உலக விளையாட்டு, இந்தியாவில் கல்கத்தா கோவா, கேரளம், வடகிழக்கில் சில பகுதி போன்றவை கால்பந்து பகுதிகள்

மற்றபடி அதிகமில்லை, இந்தியாவினை தாண்டித்தான் அதன் உலகமே உள்ளது

பிகில் படத்தில் கால்பந்தில் ஸ்டைல் காட்டுவது, பறந்து பறந்து கோல் அடிப்பது, பந்தை காலால் அல்ல மூச்சு காற்றாலே கடத்துவது , கோகீப்பரை பார்த்து சில நிமிடம் புன்னகைத்துவிட்டு பந்தை மெல்ல தட்டுவது, எதிரணிவீரர்களை கெத்தாக முறைப்பது , ஒரே ஒருவன் தனியாக 10 கோல் அடிப்பது

இந்தமாதிரி ஓவர் இம்சைகள் செய்து விளையாட்டை கொச்சைபடுத்தினால் வட சென்னைவாசிகள் அல்ல அந்த மாரடோனாவே துப்பாக்கி தூக்கிகொண்டு ஓடிவருவார்

மெஸ்ஸியும் ரொனால்டாவும் ப்ம்பேயும் ஆங்காங்கு இந்திய தூதரகத்தில் கண்டன புகார் கொடுப்பார்கள்

படம் வரட்டும், நாம் மாரடோனாவுக்கு அனுப்பிவிடுவோம் அதன் பின் அர்ஜென்டினா இந்திய தூதரகம் என்னபாடு படபோகின்றதோ தெரியாது…