விதியே விதியே என்செய்ய நினைத்தாய் தமிழினத்தை

“விதியே விதியே என்செய்ய நினைத்தாய் தமிழினத்தை” என பாடினான் தமிழ்கவிஞன், இவர்கள் இப்பொழுது ஆடும் அழிச்சாட்டியத்தை கண்டால் உலகிலே பெரும் முட்டாள் இனம் தமிழினம் என பெயரெடுக்கும் போல‌

இந்த கொடுமைக்கும் முட்டாள்தனத்துக்கும் தமிழக மீடியாக்கள் துணை போவதுதான் அதிர்ச்சி, அந்த அளவு அறிவே இல்லா கட்டுரையாளர்கள், அவர்கள் கட்டுரைகளை அப்படியே வெளியிடும் ஆசிரியர்கள் என அவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்

ஆம் 2600 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த கீழடி மக்கள்தான் உலகின் முதல் நாகரீகமாம், அவர்கள் பேசிய தமிழ்மொழிதான் உலக மூத்த மொழியாம்

அட பைத்தியங்களா…

மெசபோடாமியா நாகரீக வயதென்ன ? 5000 ஆண்டுக்கு முந்தையது, சீன நாகரீகம் 7 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையது

எகிப்து நாகரீகம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது

நாம் பைபிளையும் உலக வரலாறையும் ஆதாரமாக கொண்டு ஓரு ஆதாரத்தை வைப்போம், அதாவது மெசபோடாமியாவின் பாபிலோன் சாம்ராஜ்யத்தை எடுக்கலாம் அது 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது

அதன் அரசனாக நெபுகாத் நேச்சர் இருந்தான் அவனே அன்றய வல்லரசின் தலைவன் , யூத இனம் அவனிடம் அடிமைகாக இருந்தது

அவனுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தான் சாலமன், அவன் கோவிலை கொள்ளை அடித்து சென்றான் நேச்சர், அவனின் சாம்ராஜ்யத்தை பின்பு நொறுக்கி தள்ளினான் அலெக்ஸ்டடர்

நாம் எதற்காக சொல்கின்றோம் என்றால் அன்றே பெரும் நாகரீகங்களும் வல்லரசுகளும் இருந்தன் உலகை ஆட்டின‌

எகிப்து, பாபிலோன் மதமும், கிரேக்க மதமும் பின்னாளில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமால் அடையாளமின்றி அழிக்கபட்டன இன்று அவற்றுக்கான அடையாளமே இல்லை

2600 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வல்லரசாக இருந்தார்கள், உலகை ஆண்டார்கள்

அவர்களுக்கு 3000 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே எகிப்தியர் பிரமீடு கட்டும் அளவு அறிவிலும் விஞ்ஞானத்திலும் மதத்திலும் உயர்வாய் இருந்தனர்

சிந்துசமவெளி நாகரீகம் கூட 4 ஆயிரம் வருடத்துக்கு முந்தையது

இப்படி உலகெமல்லாம் உறுதிபடுத்தபட்ட நிலை இருக்க வெறும் 2600 ஆண்டுக்கு முற்பட்ட கீழடி உலகின் மூத்தகுடி என கிளம்பினால் என்னாகும்

பூம்புகார் கடலில் கிடக்கின்றது அது தமிழன் நாகரீக தளம்

இந்த வைகை என்பதும் மதுரை என்பதும் வித்தியாசமான கோணங்களில் பார்க்க வேண்டும், பொதுவாக ஒரு நதியின் கரையில் நாகரீகம் அமையும்

டைக்கிரீஸ், நைல்,சீனாவின் மஞ்சள் ஆறு சிந்துநதி தீரம் எல்லாம் அவ்வகை

தமிழனுக்கு அப்படி காவேரி கரையில் வரலாறு இருந்தது அதுவும் கடலுக்குள் சென்றாயிற்று, தாமிர பரணிகரையிலும் உண்டு அதை சொல்லமாட்டார்கள்

வைகை என்பது சிவபெருமான் வந்து ஓடவைத்த நதி என்பார்கள் அதெல்லாம் புராணம் விட்டுவிடலாம்

ஆனால் வைகையினை கவனியுங்கள், மற்ற ஆறுக்கும் அதற்கும் வித்தியாசம் உண்டு, மற்ற ஆறுகள் மலையில் பிறந்து கடலில் கலக்கும், இடையில் அணைகட்டி ஆற்றை திருப்புவார்கள்

ஆனால் வைகை அப்படி அல்ல அது ஏரிகளை நிரப்பி நிரப்பி அதன் பின்பே கடலில் கலக்கும், நிச்சயம் ஒரு ஆறு இப்படி இயல்பாய் இருக்கமுடியாது

என்றோ ஒரு காலத்தில் நீர்வசதியினை ஏற்படுத்திவிட்டு திட்டமிட்டு உருவான நகரம் மதுரை என்ற சர்ச்சை அக்காலத்தில் இருந்தே உண்டு

பூம்புகார் கடலில் மூழ்கியபின் அந்த ஏற்பாடு நடந்திருக்கலாம் என்பார்கள் ஒரு சிலர்

கண்ணகி வந்த மதுரை கூட வைகைகு வடக்கு பக்கம் இருந்த மதுரை என்றும் அது மண்மேடாய் போனபின் தொலைவில் புதுமதுரை உருவானது என்பார்கள்

ஆக காலத்தால் மிக மிக பிந்தைய ஒரு விஷயத்தை அதுவும் ஆற்றங்கரையில் மனிதன் வாழதொடங்கிய ஒரு இடத்தினை பிடித்து கொண்டு இதுதான் தமிழனின் நாகரீகம் என ஒற்றைகாலில் நிற்பது சரியல்ல‌

உடனே தமிழனுக்கு மதமில்லை என கிளம்பிவிட்டார்கள்

மனிதன் ஆதியில் அறியாமையில் இருந்தான் அவனுக்கு ஆடை கூட இல்லை, ஆக தமிழனுக்கு ஆடையில்லை என்றா சொல்லமுடியும்?

விழுப்புரம் பக்கம் கூட நியாண்டர்தால் மனிதனின் எலும்பும் ஆயுதமும் கிடைத்தன, அதற்காக அவனே தமிழன் அவனுக்கு ஆடையில்லை 5 அறிவுதான் இருந்தது ஆக தமிழனுக்கு நிர்வாணமே கோலம் என்றா கிளம்ப முடியும்?

சாலமோன் அரசனின் காலத்துக்கு ஒப்பான பூம்புகார் தமிழக சிறப்பினை மதங்களை அதன் பண்டிகைகளை தெளிவாக சொல்கின்றது

இந்திரா விழா இன்னும் பல விழாக்கள் இருந்ததை சொல்கின்றன‌

இன்னும் ஏராளமான சான்றுகளும் ஆதாரமும் உண்டு, தமிழ் இலக்கணத்தை எழுதிய அகத்தியர் சிவனடியார், அவரின் சீடர் தொல்காப்பியர்

தொல்காப்பிய பூங்கா என அதை காப்பியடித்து திமுகவினர் தலையில் மிளகாய் அரைத்தவர் கருணாநிதி

தொல்காப்பிய காலம் என்ன? அவருடைய சீடர்களான சித்தர்கள் காலமென்ன?

ஒரு மண்ணும் தெரியாது, ஒரு ஆய்வும் கிடையாது , அய்யய்யோ கீழடியில் எதுவும் கிடைக்கவில்லை அதனால் தமிழனுக்கு மதமில்லை என கிளம்ப வேண்டியது

நெபுகாத் நேச்சரின் ஈட்டியும் வாளும் கீரீடம்மும் இன்றும் லண்டன் மியூசியத்தில் உண்டு

கீழடியில் மண்பாத்திரம் தவிர உலோக பொருள் ஒன்றுமில்லை, தங்கமும் இல்லை வரைமுமில்லை, அந்த இனம் வளமாக வாழ்ந்த அடையாளம் ஏதுமில்லை

ஒரு ஆணி கூட இல்லை

ஆக ஏதோ ஒரு கிராமம், இயற்கையாய் வாழ்ந்த கிராமத்தின் இடிபாடுகளை பிடித்து கொண்டு கிளம்பிவிட்டார்கள்

இதற்கு பத்திரிகைகளும் துணை செல்வதுதான் மகா கொடுமை