விநாயகருக்கும் தமிழகத்துக்குமான
தமிழக இந்துக்களை குழப்பி அவன் இந்து அல்ல இந்தியன் அல்ல, அவன் மதமோ வழிபாடோ அற்ற ஒரு மடையன் என சொல்லவிரும்புவது சிலரின் வாழ்வியல் நோக்கம், 18ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் சாதி மோதல் இல்லை, பிராமண துவேஷம் இல்லை தமிழருக்கு தீபாவளி கிடையாது, தமிழருக்கு கோகுலாஷ்ட்டமி கிடையாது, ராமநவமி கிடையாது என சொல்லும் கும்பலெல்லாம் இல்லை
இவையெல்லாம் பிரிட்டிஷ் கிறிஸ்துவ மிஷனரிகாலத்தில் உருவானவை
வெல்லமுடியா யானையினை பட்டினிபோட்டு பிடிக்கவேண்டும் என இந்துமத அழிவுக்காக இட்டுபட்ட கதைகள் இவை
இந்த வரிசையில் இப்பொழுது விநாயகரையும் சேர்த்து அவருக்கும் தமிழனுக்கும் தொடர்பில்லை என சொல்லும் கூட்டம் வழக்கம் போல் தன் கெட்டுபோன கட்டுசோற்றை அவிழ்க்கின்றது
விநாயகருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பை கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கலாம்
விநாயகரே வியாசருக்கு வேதங்களையும் இதிகாசங்களையும் போதித்தார் என்பது இந்துக்கள் நம்பிக்கை, வியாசர்தான் நால்வகை வேதம், சூத்திரம், 18 வகை புராணம் , இதிகாசம் என எல்லாமும் கொடுத்தார், முறைபடுத்தி கொடுத்தார்
அவ்வகையில் இந்துக்களுக்கு எல்லாமுமானவர் மூத்த பெரும் தெய்வம் விநாயகரே அவர் இல்லாவிடில் இன்று காணும் இந்து நூல்களோ வேதங்களோ எதுவுமில்லை, அந்த விநாயகரை இந்துக்கள் எல்லோரும் கொண்டாடினார்கள்
ராவணன் தென்னிலங்கையின் மன்னனாக இருந்தவன், அவனின் பெரும் கர்வத்தை விநாயகரே இடையனாக வந்து அவன் ஆத்மலிங்கத்தை அவனிடமிருந்து அகற்றியதும் புராணம் சொல்லும் உண்மை
அதாவது ராவணன் காலத்திலே விநாயக வழிபாடு இருந்திருக்கின்றது
அகத்தியர் வாழ்விலும் விநாயகர் வருகின்றார், காவேரியினை விநாயகரே அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து உருவாக்கினார் என்பது அகத்தியரின் பாடல்களில் சொல்லும் விஷயம், அதாவது அகத்தியரே விநாயகனின் சீடனாக இருந்திருக்கின்றார்
அகத்தியரின் சீடரான தொல்காப்பியர் பாடுகின்றார்
“தன் தோள் நான்கின் ஒன்று கை மி கூ உம்
களிறு வளர் பெரும் காடாயினும்
ஓளி பெரிது”
ஆம் தமிழை உருவாக்கியவர் அகத்தியர், அதற்கு இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர், அந்த தொல்காப்பியரே விநாகயகரை தொழுதுதான் ஆரம்பிக்கின்றார்
சித்தர்களில் தலையாய திருமூலரே தன் பாடலை விநாயகரை வணங்கி தொழுகின்றார்
“ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்ற்ற்ற்னை “
என்ற வணகதுடன் தொடங்குகிறார்”
ஆம், விநாயகர் இந்துக்களுக்கு முதலோன், உலகம் முழுக்க இந்துமதம் பரவிய காலத்தில் அவர் அப்படிபெரும் தெய்வமாக இருந்தார் இன்றும் இந்தோனேஷியாவில் பிள்ளையார் வழிபாடு உண்டு, ஆலயம் உண்டு அவர்கள் கரன்சியில் விநாயகரே உண்டு
இது இன்னும் பல நாடுகளில் உண்டு
அப்படிபட்ட விநாயகர் தமிழன் இந்துவாக இருந்ததால் இங்கும் கொண்டாடபட்டார், அவர் பரஞ்சோதி எனும் சிறுதொண்ட நாயனார் காலத்தில் வாதாபியில் இருந்து முதன் முதலாக வந்தார் என்பதெல்லாம் அறியாமை
தமிழக இலக்கியமும் வழிபாடும் எக்காலமும் விநாயகரையே முன்னிறுத்தி நின்றன, அவை மிக மிக பழமையானவை
பாரதம் பாடிய பெருந்தேவனார் விநாயகரை காட்டுகின்றார், அதுவும் பாரதபோரை பனிமலை மேல் இருந்து பார்த்த விநாயகர் என தொடங்குகின்றார்
“சீதம் பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும் தனிக்கோட்டு வாரணத்தின் தாள்.” என்பது அவரின் தொடக்க வரி
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” என்பது கபிலதேவரின் வடமொழி ஸ்லோகத்தை தமிழில் மொழிபெயர்த்த அவ்வளையாரின் சமகால கவிஞன் பாரிமலை கபிலர் கொடுத்த வரி
“நந்தி மகன் ஞானக்கொழுந்து” என திருமூலர் சுட்டிகாட்டுகின்றார் “அரசு மகிழ் அத்தி முகத்தான்” என நம்பியாண்டார் நம்பி விநாயகரை தொழுகின்றார்.
சங்க இலக்கியமான பரிபாடல் விநாயகரை இப்படி அழகாக பாடுகின்றது
“முக்கை முனிவ நாற்கை அண்ணல்
ஐங்கை மைந்த அறுகை நெடுவேள்” என்கின்றது
“பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ”, “சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி”, ‘நின்யானைச் சென்னிநிறம் குங்குமத்தால்” என்பதும் பரிபாடலில் உள்ள விநாயகபெருமானுக்கான வரிகள்
“பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே”
அதாவது ஆண்யானை போன்ற பலம் கொண்ட சிவனும் பெண்யானை போல பலம் கொண்ட தேவியும் தங்கள் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைவதற்காகத் கணபதியைத் தோற்றுவித்தருளினார்கள் என்பது பாடலின் பொருள், இதை பாடியவர் சம்பந்தபெருமான்
“வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன்” என்பதும்
“கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்” என்பதும் அப்பர் சுவாமிகள் பாடல்
“ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்
ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகுஓட்டும் அயன்திருமால் செல்வமும்
ஒன்றோ என்னச் செய்யும் தேவே”
என்பது ஞான சித்தியார் எனும் சித்தரின் பாடல் இவர் காலம் பழமையானது
“பண்ணிய மேந்தும் கரந்தனக் காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி யாதெமனக் கலச
வியன்கரந் தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலா ணவவெங் கரிபணித் தடக்கிக்
கரிசி னேற்கிருபையு மாக்கு
மண்ணலைத் தணிகை வரைவளராபக்
காயனை யகந்தரீஇக் களிப்பாம்”
எனத் தணிகைபுராணம் விநாயகரை அழகாக பாடுகின்றது
அதாவது விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்ட நாயகராய்ப் புவியில் அருட் பாலிப்பவர். அக்கரங்களில் ஒன்றினைத் தமக்காகவும் பிறிதொன்றினைத் தேவர்களுக்காகவும் மற்றொன்றினை தாய் தந்தையர்க்காகவும் மேலும் இரண்டு கரங்களை நம்போல் மானுடர்க்கு அருள் புரிவதற்காகவும் கொண்டு விளங்குகிறார் என்பது பாடலின் பொருளாகும்
“வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து – கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்”
என்கின்றது திருநரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை, இது நம்பியாண்டார் நம்பி எனும் சிவனடியார் பாடியது
“கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி” என்கின்றார் அருணகிரியார்
“மும்மை புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன் அம்மை தருக முத்தம் என அழைப்ப, ஆங்கே சிறிதகன்று தம்மின் முத்தம் கொள நோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்”
என நந்திக்கலம்பகத்தில் காப்பு செயலாக பிள்ளையார் துதியே இருக்கின்றது
“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன்மகனே – ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்”
என விநாயகரை பாடுகின்றது பழம் இலக்கியமான திருமுருகாற்றுபடை
“எல்லோராலும் மதிப்பற்றது என ஒதுக்கப்படும் எருக்கம்பூவை கடவுள் ஏற்றுக்கொள்வதை போல, பாரி பிறரால் மதிப்பற்றவர்கள் என ஒதுக்கப்படும் மக்களுக்கே கொடைகளை அள்ளி வழங்குகிறார்” என குறிப்பிடுகிறார் கபிலர்
அதாவது எருக்கம்பூவினை விநாயகராக வழிபடும் தமிழக வழமையினை தன் பாடலில் சொல்கின்றார்
“எக்கோலத்து எவ்வுருவாய், எத்தவங்கள் செய்வாருக்கும் அக்கோலத் தவ்வுருவேயாம்” என்கின்றார் காரைக்காலம்மையார்
இன்னும் கோச்செங்க நாயனார் வாழ்விலும், குங்கிலிய கலய நாயனார் வாழ்விலும் விநாயகர் வழிகாட்டியதையும், சிறுதொண்ட நாயனார் “கணபதிகோட்டம்” என ஒரு ஆலயம் கட்டி வழிபட்டதையும் நாயன்மார் வாழ்வு சொல்கின்றது
“தடந்தாட்கு ஒத்த தமனியச் சிலம்பு
படம் தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர
வென்றாடு திருத்தாதை வியந்துகைத் துடிகொட்ட
நின்றாடும் மழகளிற்றை நினைவாரோ வினையிலரே” என விநாயகரை பாடுகின்றது பெருங்கதை
தமிழக இனங்களில் மிக தொன்மையானதும், கோவலன் பட்டினத்தார் என பெரும் அடையாளங்களை கொண்டதும், சிவநேச செல்வர்கள் என அடைமொழி கொண்டவர்களுமான செட்டிநாட்டு நகரத்தார்களுக்கு மக்களுக்கு பிள்ளையார்பட்டி விநாயகரே குலதெய்வம்
இந்த மரபு பூம்புகாரிலிருந்து வந்ததாக அவர்கள் வரலாறு சொல்கின்றது
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்து விநாயகர் சிலை நாயக்க மன்னன் காலத்தில் கண்டெடுக்கபட்டதே தவிர அது காலத்தால் மிக மிக பழமையானது
இந்த தமிழ் இந்துமரபில் வந்த பெரும் விநாயக பக்தைதான் ஒளவையார், தன் ஒவ்வொரு அசைவிலும் பிள்ளையாரை பாடி விநாயக பக்திக்கு சாட்சியாய் நிற்கின்றாள்
திருமூலரின் மூவாயிரம் பாடல்களை தன் “விநாயகர் அகவல்” எனும் 72 வரி பாடலில் மிக அழகாக சமன் செய்யும் வித்தையினை அவள் விநாயக அருளால் செய்தாள்
ஆம், விநாயக பெருமையினையும் அந்த யோக நிலையினையும் மிக சுருக்கமாக அழகாக பாடி தமிழக இந்துக்களின் விநாயகர் பக்திக்கு எக்காலமும் அவள் சாட்சியாக நிற்கின்றாள்
இந்த மரபில் வந்த பாரதியும் விநாயகரை பாடி வைத்தான்
“கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்”
ஆம் இங்கு வியாசர், அகத்தியர் காலத்திலே விநாயக வழிபாடு தொடங்கிற்று, தமிழ் உருவானபொழுதே விநாயக வழிபாடு தொடங்கிற்று
ராவணன் காலம் முதல் இன்றுவரை விநாயகர் இங்கு கொண்டாடபடுகின்றார், இடையில் சமணம் பவுத்தம் என எழுந்த அலைகளையும் தாண்டி அவரின் வழிபாடும் கொண்டாட்டமும் இருக்கின்றது
அப்படிபட்ட விநாயகர் வழிபாடு தமிழனுக்கு தொடர்பில்லாதது என்பது மடதனமான வாதம்
அப்படி விநாயகருக்கும் தமிழனுக்கும் தொடர்பில்லை என சொல்லும் மடகும்பல் மேற்காசியாவின் மகான்களுக்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு என ஒருவார்த்தை கேட்குமா? ஐரோப்பிய தெய்வத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என கேட்குமா என்றால் கேட்காது
காரணம் அவைகளுக்கு கொடுக்கபட்டிருக்கும் வேலை எதுவோ அதை ஒன்றை அவை சரியா செய்யும் அதாவது தமிழனை இந்துமதத்தில் இருந்து துண்டிப்பது, அப்படி துண்டித்து குழப்பி இதர மதங்களுக்கு இழுப்பது
இம்மாதிரி கும்பல்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தம் முன்னோர் வழியில் இந்துக்களாக விநாயகரை வணங்கி அகத்தியர், தொல்காப்பியர் , மன்னர்கள், நாயன்மார்கள், ஒளவை, பாரதி வரிசையில் அந்த மூலகடவுளை வணங்கி ஞானமும் அறிவும் தெளிவும் பெற்றுவரவேண்டும்
அதுதான் இந்துக்களுக்கும் இந்திய தேசத்துக்கும் அவசியமான ஒன்று
விநாயகர் சதுர்த்தி என்பது சாதாரண விழா அல்ல, அது வியாசருக்கே வேதங்களையும் அதன் வேர்களையும் கனிகளையும் போதித்த விநாயக பெருமானுக்கான விழா, இந்துக்களின் மூல விழா, அதனை உற்சாகமாக கொண்டாட வேண்டியது ஒவ்வொரு இந்துவின் முக்கிய கடமைகளில் ஒன்று
Great
Great essay