காங்கிரசல்லா முதல் பிரதமர்
நிச்சயம் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் காங்கிரசல்லா முதல் பிரதமர், காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்
காங்கிரசை எதிர்த்து ஒரு மத்திய அரசு சாத்தியம் என அவர் சொல்லிகொடுத்த வழியில் இடையில் விபிசிங் தோற்றாலும் பின்ன்னாளில் பாஜக பெரும் சக்தியாய் வியாபிக்க முடிந்தது
ஆனாலும் மொரார்ஜி தேசாயின் சில சர்ச்சைகள் மறுக்க முடியாதவை அவர் மீதான கருப்பு புள்ளிகள் அவை
நல்ல நிர்வாகி, மும்பை மகராஷ்ட்ரா பிரச்சினைகளை எல்லாம் தீர்த்தார். மும்பை போன்றவை தனி நிர்வாகம் கொண்ட தொழில்நிலையங்களாக நிர்வகிக்கபட வேண்டும், இனம் மொழி அதில் ஆதிக்கம் செலுத்தகூடாது போன்ற அவரின் கருத்துக்கள் சரி
அண்டை நாடுகளுடன் நேரு போல் மிக அமைதியான தொடர்புகளை பேண முயன்றதும் நல்லது, ஆனால் பெரும் சறுக்கலில் இத்தேசம் அவரால் சிக்கியது
இந்திரா இந்திய உளவுதுறையான ராவினை நன்றாக வளர்த்திருந்தார், அது பல சாதனைகளை செய்தது
அதில் ஒன்றுதான் இந்தியா அணுகுண்டு செய்தவுடன் பாகிஸ்தானும் அலறிஅடித்து அணுகுண்டு செய்ததை கண்டறிந்தது
அது இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனையாக கொண்டாடி இருக்கவேண்டிய நிகழ்வு ஆனால் மொரார்ஜி தேசாயால் அது தடுக்கபட்டது
ஆம் ராவின் மிகபெரிய சாதனை அது
ஓசைபடாமல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரா உளவாளிகள் பாகிஸ்தானை அட்டகாசமாக உளவு பார்த்தனர்
பாகிஸ்தானின் கவுட்டா பகுதியில் மர்ம தொழிற்சாலை அமைக்கபடுவதை கவனித்த ரா உளவாளி ஒருவர் அங்கேயே சலூன் கடை அமைத்துவிட்டார்
எப்படியோ பாகிஸ்தானிய அணு விஞ்ஞானிகளுக்கும் பணியாளருக்கும் முடிவெட்டும் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த முடியினை கடத்தினார்
அந்த முடியில் லேசான கதிர்பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது, இந்திய தரப்பு உஷாரானது
இதனிலும் இன்னொரு ரா உளவாளி பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தில் நுழைந்து அந்த அணுமின் நிலையத்து மாதிரி படத்தினையே அசாத்தியமாக கடத்தினான்
இவை எல்லாம் மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வந்தபொழுது அவரோ ராவினை மூடிவிடும் முடிவிற்கு வந்தார், அதற்கு ஒதுக்கபடும் நிதியினை குறைத்தார்
ரா அலறி கெஞ்சியது, இது பின்னாளில் பெரும் சிக்கலுக்கு இட்டு செல்லும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை வேறு வகையில் பணம் கிடைக்க சில சட்ட விதிகளை மாற்றுங்கள் என கெஞ்சியது
அசைந்து கொடுக்கவில்லை மொரார்ஜி தேசாய். அந்நிய நாட்டு விவகாரம் நமக்கெதற்கு என அவர்போக்கில் இருந்தார்
ராவினை பின் தொடர்ந்த இஸ்ரேலிய மொசாத்திற்கும் விஷயம் புரிந்தது, அவர்களும் அலறினார்கள்
காரணம் அணுகுண்டு தயாரிக்கபோகும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். ஈராக், சிரியா எல்லாம் அணுகுண்டு தயாரிக்காமல் பார்த்துகொண்ட அவர்களுக்கு பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அவசியம் இருந்தது
எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் மிக லேட்டஸ்ட்டான அணுகுண்டை வாங்கி தன் பழமையான அணுகுண்டை கொடுக்கும் சீன அரசியலும் நடந்துகொண்டிருந்தது
அதாவது பாகிஸ்தானை பல நாடுகள் கண்காணித்தன, சில மேஜைக்கு கீழ் பேசின
அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜியா உல்கக்கோ அமெரிக்காவினையே காசுக்காக அலைய வைத்துகொண்டிருந்தார்
இந்தியாவினை சமாளிக்க பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவிற்கு சில விஷயங்களால் அதனை தடுக்கும் அவசியம் வந்தது
இஸ்ரேல் மிக தீவிரமாக இருந்தது, எவ்வளவு தீவிரம் என்றால் அவர்களின் யுத்த பிதாமகன் மோசே தயானே கெஞ்சும் அளவு இறங்கினார்கள்
அன்று பாகிஸ்தான்வரை பறக்கும் யுத்த விமானம் இஸ்ரேலிடம் இல்லை, அதனால் பாகிஸ்தான் அணு உலையினை தாக்க இந்தியா உதவி தேவைபட்டது
ஒரே ஒரு விமானம் தாருங்கள், நாங்கள் பாகிஸ்தான் அணுவுலையினை துவம்சம் செய்துவிடுவோம் என முடிந்தவரை மல்லுகட்டியது இஸ்ரேல்
ஆனால் மொரார்ஜி தேசாய் அசைந்துகொடுக்கவில்லை அத்தோடு விட்டாரா?
இதுவரை நடந்தவை பாகிஸ்தானுக்கு தெரியாது. அடிக்கடி தன்னை பல சக்திகள் தொல்லை செய்வதை தவிர்க்க பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை செய்த எல்லா விஷயங்களையும் உலகிற்கு சொல்லிவிட்டார் மொரார்ஜி , உளவாளி அடையாளம் உட்பட
நன்றி மொராய்ஜி என சுதாரித்த பாகிஸ்தான் அட்டகாசமாக அரசியல் செய்தது.
அத்தோடு தன் அணுவிவகாரங்களை அவசரமாக மறைத்து, இந்திய உளவு வலைப்பின்னலை கண்டறிந்து அனைத்து இந்திய உளவாளிகளையும் கொன்றது பாகிஸ்தான்
இஸ்ரேல் அத்தோடு ஒதுங்கியது
அதன் பின் வந்த இந்திராவும் இவை எல்லாம் வெளிவந்த அதிர்ச்சியில் அடக்கி வாசித்தார்
இம்மாதிரி சொதப்பலால் அடுத்த தேர்தலில் படு மோசமாக தோற்றார் மொரார்ஜி தேசாய்
இந்திய பிரதமர்களில் மிக மிக மோசமான அடிமுட்டாள் தனமான பிரதமர் ஒருவர் உண்டென்றால் சந்தேகமே இல்லை மொரார்ஜிதான்
பாகிஸ்தானை அவர் சகோதர நாடு என நினைத்ததுதான் இத்தனைக்கும் காரணம், அந்நாடு இந்தியாவிற்கு எவ்வளவு பெரும் மிரட்டல் என அவர் நினைக்கவில்லை
விளைவு அன்று தன் அணுநிலையத்தின் மீது சிறு துரும்பும் விழாமல் பாதுகாத்த பாகிஸ்தான் தொடர்ந்து 1998ல் அணுகுண்டு செய்தது
பாகிஸ்தானில் இந்தியா வைத்திருந்த உளவுபின்னலும் நாசமாயிற்று
பாகிஸ்தான் மகிழ்ச்சியில் திளைத்து என்ன செய்தது என்றால் அவர்களின் மிக உயரிய விருதான “நிசான் இ பாகிஸ்தான்” விருதை மொரார்ஜிக்கு வழங்கியது
இந்திய அரசும் பாரத ரத்னாவினை மொரார்ஜிக்கு வழங்கியது, அது ஏன் என்பதுதான் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்று கொடுத்த வழிகாட்டி என கொடுக்கபட்டிருக்கலாம்
இன்றுவரை பாகிஸ்தான், இந்தியா உயர்விருதை பெற்ற ஒரே நபர் மொரார்ஜி ஒருவரே
மனிதர் இப்படி சொதப்பினாரே அன்றி ஊழலிலோ இல்லை வேறு சர்ச்சையிலோ சிக்காதவர், சாகும்பொழுதும் சொந்த வீடு இல்லை , இன்று அவர் குடும்பமும் அரசியலில் இல்லை
தனிபட்ட வகையில் அவர் அறிவாளி, ஆனால் பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற வகையில் அவர் பல காரியங்களை விட்டுகொடுத்து பாகிஸ்தானின் நலனை காத்தார்
அது பின்னாளில் பெரும் மிரட்டலாய் வந்து நிற்கின்றது
எல்லா பெரிய மனிதரும் தவறு செய்வார்கள் எனினும் மொரார்ஜி சொதப்பிய சொதப்பல் மகா அதிகம், பாகிஸ்தானியருக்கே மகிழ்ச்சி என்றால் பாருங்கள்
ஆனால் மொரார்ஜியால் தமிழகத்தில் சில நன்மைகள் விளைந்தன
முதலமைச்சர் ஆன பின்பும் எங்கே திரையுலகம் தன் கையினை விட்டு போகுமோ என அஞ்சி மேக் அப் போட்டு நடிக்க வந்தார் ராமசந்திரன்
காவேரி, விவசாயி இன்னபல சிக்கல் இருக்க அவரோ “உன்னை விடமாட்டேன்” என டைட்டில் வைத்து (கலைஞரையாக இருக்குமோ?) லதா சகிதம் சூட்டிங் தொடங்கிவிட்டார்
“ஒன்று நடியுங்கள் இல்லை முதலமைச்சராக இருங்கள் . முதல்வராக இருந்து கொண்டு நீர் கேமரா முன் நடிப்பதை நான் விரும்பமாட்டேன், அரசு டிஸ்மிஸ் ஆகும்” என்றார் மொரார்ஜி
அத்தோடு மேக் அப்பை கலைத்துவிட்டு சமத்தாக முதல்வரானார் ராமசந்திரன். எந்த ராமசந்திரன்?
அண்ணா மறைவுக்கு பின் நீங்கள் நடிப்பதை நிறுத்துங்கள் உங்களை அமைச்சராக்குவேன், அமைச்சர் ராமசந்திரன் நடித்தால் நன்றாய் இருக்காது என சொன்ன கலைஞரிடம் என் பியூச்சரை பாழாக்க சொல்கின்றீரா? நடிப்பதை நிறுத்தமாட்டேன் என சொன்ன அந்த ராமசந்திரன்
கலைஞர் சொல்லி கேட்காத ராமசந்திரன் , மொராஜி சொன்னவுடன் கேட்டார்
இன்னும் மொரார்ஜி பிரதமரான காலங்களில் கலைஞர் மேல் பல வழக்குகள் பதிய சொல்லி பைலோடு அலைந்தது ராமசந்திரன் கோஷ்டி
ஆனால் இந்திரா பற்றியும் அவர் உருவாக்கிய ராமசந்திரன் பற்றியும் நன்கு அறிந்த மொரார்ஜி அதை ஏற்கவில்லை
இந்த இரு விஷயங்கள் மட்டுமே மொரார்ஜியிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்
மற்றபடி பார்ப்பதற்கு தளபதி படத்து கலிவரதன் போலிருக்கும் மொரார்ஜி தேசாய் பாகிஸ்தானுக்கு செய்த பெரும் உதவி இத்தேசத்தின் பெரும் அவமானம்
ஆனாலும் இந்நாட்டின் பிரதமர் வரிசையில் மாற்றங்களை அறிமுகபடுத்திய அவருக்கு, மாற்று உண்டாக்கிய அவருக்கு இன்று நினைவுநாள்
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி
நம்மை விட பாகிஸ்தானியர் ககுதா அணுவுலையில் பெரும் அஞ்சலி செலுத்திகொண்டிருக்க கூடும்
காரணம் 17 நாடுகளை தனியே அடித்துவிரட்டிய மாவீரன் மோசே தயானின் கழுகு பார்வையில் இருந்து பாகிஸ்தானின் அணுவுலை தப்பவும், பாகிஸ்தான் அணுகுண்டு செய்யவும் மொரார்ஜி தேசாயின் அணுகுமுறையே பெரும் காரணம்
அணுகுண்டு செய்த முதல் இஸ்லாமிய நாடு எனும் பெருமையினை அது பெற ஒரே காரணம் மொரார்ஜி தேசாய்
