விமானப்படையின் திறமை

40 வருட மிக பழையமான மிக் 21 ரக விமானத்தில், மிக பின் தங்கிய தொழில்நுட்பத்தை கொண்ட BVR ரக ஏவுகனைகளை கொண்டு இந்தியா தன் நவீன எப்16 ரக விமானத்தை வீழ்த்தியதில் ஒருவித கோபத்தில் இருக்கின்றது அமெரிக்கா

ஆம் எப் 16ஐ சோவியத்தின் மிக பழமையான மிக் 21 வீழ்த்திவிட்டது என்பது அமெரிக்க முகாமில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது

தாவீது வெறும் கூழாங்கல்லால் அரக்கன் கோலியாத்தை வீழ்த்தியது போன்றது இது

நம் விமானபடை அவ்வளவு திறமையாக அடித்திருக்கின்றது, அடித்தவர் அபினந்தனா இல்லை வேறு விமானியா என்பது பற்றி தகவலில்லை அது வரவும் வராது

உலக அளவில் இந்திய விமானபடை கம்பீரமாக இத்தருணத்தில் உயர்ந்து நிற்பது மட்டும் உண்மை

கலைஞர் அன்றே சொன்னதுதான் “வீரனுக்கு உடைந்த வாளாயினும் ஒரு வாள் போதும்”

இப்பொழுதும் கலைஞர் இருந்தால் அபினந்தனை எப்படி வரவேற்பார் தெரியுமா?

“ராவணன் சேனையில் வானில் இருந்து மாய அம்புகளை வீசி வெற்றிமேல் வெற்றிபெற்றானே இந்திரஜித்தன்

அந்த இந்திரஜித்தனை மாவீரன் தமிழ்வீரன் அபினந்தன் உருவத்தில் காண்கின்றேன்”

இப்படி எல்லாம் பேச இப்பொழுது யாருமில்லை, உங்களை மிகவும் தேடுகின்றோம் கலைஞரே…