விமானம் சும்மா நிற்கும் என்ற பேச்சுக்கே மோடி ஆட்சியில் இடமில்லை
இதுவரை இந்திய பிரதமருக்கும் குடியரசு தலைவர் போன்றோர்களுக்கும் சிறப்பு விமானங்கள் இல்லை, அரசு பயணம் என்றால் ஏதாவது ஒரு ஏர் இந்தியா விமானத்தை அவசரமாக மாற்றி அரசுமுறை பயணமாக செல்வார்கள், பயணம் முடிந்ததும் விமானம் பழையபடி பயணிகளை சுமக்கும்
அமெரிக்கா, இஸ்ரேல் , சீனா, ரஷ்யா என எல்லா நாட்டு அதிபர்களுக்கும் தனி விமானம் உண்டு, அதில் பலத்த பாதுகாப்பும் உண்டு
ஏவுகனைகளில் இருந்து தப்பித்தல், தற்காத்தல் இன்னும் அவசரகாலத்தில் ஒரு சேதமுமின்றி நாட்டின் உயர்தலைவரை காத்தல் என பல நுட்பமான பாதுகாப்பு அம்சம் உண்டு
அதிலும் அமெரிக்க அதிபர் விமானம் கேட்கவே வேண்டாம், உதாரணத்துக்கு செப்டம்பர் 11 தாக்குதலில் விஷயம் நடந்ததும் ஜார்ஜ் புஷ்சை அப்படியே ஏர்போர்ஸ் 1 விமானத்தில்ல் அள்ளிபோட்டு 40 ஆயிரம் அடி உயரத்தில் சிலமணிநேரம் நிறுத்திவைத்து இங்கு பாதுகாப்பு உறுதிபடுத்தபட்டதும் இறக்கினார்கள்
அன்று அவர்கள் சொன்னது அவசர காலத்தில் தலைவர் பாதுகாப்பாக இருக்க அதை தவிர வழி இல்லை
ஆம் அந்த அளவு பாதுகாப்பானது அவர்கள் விமானம்
இந்தியாவில் இதுவரை அப்படி இல்லை, சாதாரண விமானத்தில் பயணித்த பிரதருக்கு இனி ஸ்பெஷல் விமானம் வரபோகின்றது
இது மோடிக்கானது அல்ல அடுத்து ராகுல்காந்தி வந்தாலும் அதில்தான் செல்வார்
இதனை போயிங் கம்பெனி தயாரிக்கின்றது, நவீன வசதிகளுடன் விமானத்தில் எல்லா பாதுகாப்பு மற்றும் தொடர்பு வசதிகளுடன் அந்தரத்தில் இருந்தே மோடி ஆட்சி செய்யும் அளவு மகா நுணுக்கமாக தயாரிக்கபடுகின்றது
கடத்தலோ இல்லை தகர்ப்போ சாத்தியமே இல்லா வகையில் அது தயாரிக்கபடும், காலமாற்றம் இது கண்டிப்பாக இவ்வகை விமானம் தேவை
இம்மாதிரி விமானங்களில் ஒரு சிக்கல் உண்டு, அதாவது விமானம் வெளிநாட்டு பயணமோ உள்நாட்டு பயணமோ இல்லா நிலையில் சும்மா நிறுத்தபடும், அதனால் பராமரிப்பு செலவு அதிகம்
ஆனால் மோடிக்கு விமானம் வந்துவிட்டால் அது சும்மா இருக்குமா? அலெக்ஸாண்டரின் குதிரை போல அது ஓடிகொண்டே இருக்காதா?
அதனால் விமானம் சும்மா நிற்கும் என்ற பேச்சுக்கே மோடி ஆட்சியில் இடமில்லை
