வியாபாரம் தவிர எதுவும் தெரியா நாடு அமெரிக்கா
வியாபாரம் தவிர எதுவும் தெரியா நாடு அமெரிக்கா, அவர்கள் வல்லரசாய் நிற்பதும் உலக ஆதிக்கத்தில் கொடிகட்டி பறப்பதும் அந்த வியாபாரம் ஒன்றாலே
1950களுக்கு பின் உலகின் பல நாடுகள் தோளில் கை போட்டு கொண்டு பெரும் சலுகைகளை அளித்து வியாபாரம் செய்தது அமெரிக்கா
கம்யூனிச எதிர்ப்பு , எதிரி நாடுகள் ஒழிப்பு என அந்த திருப்பணியினை செவ்வனே செய்தது
இப்பொழுது உலக செல்வங்களை எல்லாம் தன் பக்கம் திருப்பும் காரியத்தை டிரம்ப் என்பவர் மூலமாக அந்நாடு செய்கின்றது.
இனி பழைய சலுகை இல்லை என சொல்லி உலகெல்லாம் உள்ள நாடுகளுடன் வர்த்தக போரில் இறங்கிவிட்டது
சீனா, ஜப்பான், ஜெர்மனி, இந்தியாவினை தொடர்ந்து பிரான்ஸுடனும் வம்பிழுக்கின்றது
பிரான்ஸும் சரியான நடவடிக்கைகளை எடுக்கின்றது, நிச்சயம் அது உலகிற்கே வழிகாட்டும் விஷயம்
அதாவது இந்த கூகிள், அமேசான் போன்ற இணைய கம்பெனிகள் இருப்பது அமெரிக்காவில் ஆனால் விஞ்ஞான உத்தியில் உலகெல்லாம் சம்பாதிக்க்கும்
சம்பாதித்தால் வரிகட்ட வேண்டும் அல்லவா? ஆனால் வரியினை அமெரிக்காவுக்கு மட்டும் கட்டுவார்கள்
பிரான்ஸ் இதற்கு கடிவாளம் போடுகின்றது, எங்கள் நாட்டில் இணைய வர்த்தகம் செய்யும் அமெரிக்க இணைய நிறுவணம் எங்களுக்கும் வரிகட்ட வேண்டும் இல்லாவிட்டால் அவை தடைசெய்யபடும் மாற்றுவழிபற்றி யோசிப்போம் என்கின்றது
விடுவாரா டிரம்ப்?
பிரான்ஸின் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிகவரி விதிக்கும் அல்லது தடைசெய்யும் என பேசிவிட்டார்
கால காலத்துக்குமான பிரான்ஸ் அமெரிக்க உறவு மகா முக்கியமானது, பிரிட்டன் அமெரிக்க உறவினைவிட பிரான்ஸும் அமெரிக்காவும் கொண்ட உறவு பாரம்பரியமானது
இந்நிலையில் டிரம்ப் இப்படி அறிவித்திருப்பது கடும் அதிருப்தியினை அமெரிக்காவில் ஏற்படுத்தியிருக்கின்றது
குறிப்பாக அந்த வார்த்தை?
எந்த வார்த்தை
பிரான்ஸின் பெரும் தயாரிப்பும் அமெரிக்க இறக்குமதியுமான பிரென்ச்ஞ் ஒயினை அமெரிக்கர் குடிக்க கூடாது என டிரம்ப் சொன்ன அந்த வார்த்தை
உலகின் நம்பர் 1 ஒயின் பிரென்ச்ஞ் ஒயின், மற்ற நாடுகள் தயாரிப்பு தலைகீழாய் நின்றாலும் பிரென்ச்ஞ் ஒயினின் அருகில் கூட வரமுடியாது
அந்த பிரென்ஞ் ஒயினை குடிக்காதே என்றால் அமெரிக்கர்கள் விடுவார்களா?
சீனா, ஜப்பான், இந்தியாவினை தொடர்ந்து பிரான்ஸ் கடும் அப்செட்டில் இருக்கின்றது
போகிற போக்கில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அமெரிக்கா மேல் பொருளாதார தடை விதித்தாலும் ஆச்சரியமில்லை