விருதுநகரிலும் புரட்சி பெண்கள்
கன்னியாகுமரியினை தொடர்ந்து விருதுநகரிலும் புரட்சி பெண்கள் பெரும் காரியம் செய்திருக்கின்றன
அந்த கயவன் மாவட்ட கலெக்டர் அலுவலக காரிய தரிசி எனவும் தன்னால் யாருக்கும் வேலைவாங்கி தரமுடியுமென்று சில இளைஞர்களிடம் பணமும் சில இளம்பெண்களிடம் பாலியல் சேட்டையும் செய்திருக்கின்றான்
பல பெண்கள் அதை வெளிசொல்லாமல் அழுதிருக்கின்றார்கள், ஒரு பெண்ணுக்கு அவனை சும்மா விட கூடாது என வன்மம் வந்திருக்கின்றது
அவள் தோழி மூலம் அவனிடம் பழக சொல்லியிருகின்றாள், அவனும் கலெக்டர் வேலையே என்னால் வாங்கிதரமுடியும் என அதே பார்முலாவினை பேசியிருக்கின்றான்
கலெக்டர் வேலை சிரமமாயிருக்கும் எனக்கு டைப் அடிக்கும் வேலை போதும் என இப்பெண்ணும் சொல்லியிருக்கின்றாள்
அட அவ்வளவுதானா, நாளை காலை வேலை இன்றிரவு அது சம்பந்தமான வேலை விளக்க மீட்டீங் என அவனும் வழக்கமான அக்ரிமென்டை பேசியிருக்கின்றான்
அம்மணி அவனை ஒரு வீட்டுக்கு வர சொல்லியிருகின்றது
அவனும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என உற்ச்சாகமாக சென்றிருக்கின்றான்
அந்த வன்ம அம்மணி பாதிக்கபட்ட சில பெண்களுடன் வீட்டின் ஒரு அறையில் பதுங்கி இருந்திருக்கின்றது
இவன் வந்தவுடன் வீட்டை தாழிட்டாள் தோழி
அதன் பின் ஆளாளுக்கு போட்டு அடி பின்னி எடுத்திருக்கின்றார்கள், ஒரு அடி கூட அடித்தாலும் செத்துவிடுவான் எனும் நிலையில் காவல்துறையில் ஒப்படைத்திருக்கின்றார்கள்
காமராஜரையே தோற்கடித்த விருதுநகரின் நேர்மை அந்த ஊர் காவல்நிலையத்திலும் இன்னும் தொடர்கின்றது
அவன் மேல் வழக்கு இல்லை என விட்டுவிட்டார்கள்
சென்னை சினிமா இயக்குநருக்கு போலிஸ் அராஜகம் என்றால் பொங்கும் ஊடகமும் திரையுலகமும் அவர் வீட்டுக்கே செல்லும் காவல் அதிகாரியும் இங்கே கண்ணை மூடிவிட்டார்கள்
ஆம் அவன் உற்சாகமாக ஓடிவிட்டான்
இனி அவனை என்ன செய்யலாம்?
ஒரு இளம்பெண் எனக்கு வேலை வேண்டும் என அவனுக்கு போன் செய்தால் வந்துவிட போகின்றான், அதற்கு பின்னால் செய்வதை செய்து அவனை சட்டம் தேவை இல்லாதபடி தண்டிக்க வேண்டியதுதான்