விரைவில் சீனாவுடன் போர்…

விரைவில் சீனாவுடன் போர்- ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் அறிவிப்பு

ஒருவேளை அமெரிக்காவும் சீனாவும் மோதி இந்த இரு காளைகளில் எந்த காளை செத்தாலும் நமக்கு லாபமே.

ஆனால் துணிந்து இருவருமே சண்டையிடுவார்களா? என்றால் மாட்டார்கள்.

இருவரும் தங்கள் பலத்தினை தங்கள் எல்லைக்குள் காட்டிவிட்டு எங்களை தாக்கினால் என்னாகும் தெரியுமா? என மிரட்டிவிட்டு அமைதியாகிவிடுவார்கள்

காரணம் பெரும் போரினை எதிர்கொள்ள இன்றைய உலகில் எந்த நாடும் தயாராக இல்லை, அதில் சீனாவும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

வடகொரியாவினையே தாக்க பலமுறை யோசிக்கும் அமெரிக்கா, சிரியாவில் களம்புக இன்னும் தயங்கும் அமெரிக்கா, சீனாவுடன் எல்லாம் மோதும் என்பது எதிர்பார்க்கமுடியாதது.

ஆனால் இப்படி சொல்லி சீனாவினை போருக்கு தூண்டிவிட்டு அது தயாராகும்பொழுது அதன் பலம் என்ன என்பதை கணிக்கும் தந்திரமும் இருக்கலாம்.

தமிழகத்தில் அதிமுக‌ ஆட்சிக்கு வந்தது எப்படி என நாம் திகைத்து போலவே அமெரிக்கர்களும் திகைத்து நிற்கின்றார்கள்

அமெரிக்க மக்கள் முணுமுணுக்க தொடங்கியாயிற்று.

எப்படி ஆயினும் விரைவில் டிரம்ப் எனும் ஜல்லிகட்டு காளையினை அமெரிக்க மக்களே பொங்கி எழுந்து பொடரியில் தட்டி தொழுவத்தில் கட்டிவிடுவார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

குறைந்தபட்சம் மூக்கணங்கயிராவது போட்டு வைப்பார்கள்.