விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை?
விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை? அவருக்கு குடும்பமா குட்டியா? என்றெல்லாம் ஒரு காலத்தில் காமராஜரை பாடாய் படுத்தினார்கள்
அவரை அப்படி குற்றம் சாட்டியவர்கள் பல மனைவிகளையும் குடும்பங்களை வைத்திருந்தார்கள் என்பது வேறுவிஷயம்,
ஆனால் குடும்ப கஷ்டம் தெரியாதவர் காமராஜர் என்றெல்லாம் அவரை பழித்தார்கள்
இப்பொழுது தக்காளி விலை கூடிற்றாம், மோடியும் அதே சிக்கலை எதிர்கொள்ளலாம், அதே கேள்விகளை கேட்பார்கள்
மோடிக்கு வெளிநாட்டு சாப்பாடு பழகிவிட்டது, உள்நாட்டில் வெங்காயம் தக்காளி என்ன விலைக்கு விற்றால் அவருக்கென்ன?
“எடு வண்டியினை..” என சொன்னால் அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ சாப்பாடு ரெடி, காலை ஜப்பானில் காபி, இரவில் நியூயார்க்கில் டின்னர், நடுவில் தாய்லாந்தில் சூப் என சுற்றலாம்
அதனால் அவருக்கு கவலையே இல்லை
இப்பொழுது தக்காளி விலை கஷ்டம் பற்றி குடும்பஸ்தர்களான எடப்பாடிக்கும், தமிழிசைக்கும் தெரியும் என்பதால் காமராஜர் சந்தித்த அந்த கேள்விகளை இவர்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லை
மீறி கேட்டால் உங்களை போலவே எங்கள் வீட்டிலும் தக்காளி தட்டுப்பாடு என சொல்லி வேதனை தெரிவித்துவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்.