விளம்பரத்தில் நடிக்க வழிகாட்டியதே கருணாநிதியும் அண்ணாவுமே

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்று தேசம் பிரிந்து எல்லை எரிந்தபொழுது, இன்னும் இத்தேசம் சவலை குழந்தையாக கண்ணீருடன் தானே எழும்பிகொண்டிருந்தபொழுது, பாகிஸ்தானுடன் யுத்தம் என்றெல்லாம் அலைபாய்ந்திருந்தபொழுது, பட்டேல் இந்நாட்டை இரும்புகரத்தோடு ஒருங்கிணைத்தபொழுது

நேருவும் காமராஜரும் சாஸ்திரியும் இந்நாட்டின் எதிர்காலத்துக்கு பெரும் திட்டம் தீட்டியபொழுது கலைஞர் என்ன செய்தார் தெரியுமா?

ராஜகுமாரி, அபிமன்பு, மருத நாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதிகொண்டிருந்தார்

அவரின் குருநாதர் அண்ணா நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு என சினிமாகதை எழுதினார்

இந்த ராம்சந்தர் கருணாநிதி பின்னால் எனக்கொரு வசனம் கொடு என கன்றுபோல் திரிந்தார்

ஆக அது நாட்டுபற்றே இல்லா நாடக கம்பெனிதான், ஜெயா மிசா காலத்தில் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க வழிகாட்டியதே அன்று வசனம் எழுதிய கருணாநிதியும் அண்ணாவுமே என்றால் அது மிகை அல்ல