விளம்பரம் செய்தால் என்ன?
கலைஞர் தன் சாதனைகளை வெளியில் சொன்னதே இல்லை உபிக்கள் வேதனை
2010 வாக்கில் ஒரு பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது , அப்பொழுது இவர் என்ன கிழித்துவிட்டார் இவருக்கு டாக்டர் பட்டம் என குரல்கள் எழும்பின
அமைதியாக முரசொலியில் எழுதினார் இப்படியாக
“உடன்பிறப்பே எனக்கு எதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என எனக்கே தெரியவில்லை, 14 வயதிலே இந்தியினை எதிர்த்தேனே அதற்கா? 18 வயதிலே பகுத்தறிவு பேசினேனே அதற்கா? 20 வயதிலே சாதி ஒழிக்க கிளம்பினேனே அதற்கா என தொடங்கி
இந்தி ஒழிப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை என நீட்டி முழங்கி
இந்த தள்ளாடும் வயதில் இன்னும் தமிழகத்திற்காக உழைக்கின்றானே இந்த கருணாநிதி அதற்கா, இதில் எதற்கு எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என எனக்கே தெரியவில்லை”
எவ்வளவு நுட்பமான அதே நேரம் குறும்பான எழுத்து அது?
கலைஞர் தன் திட்டமெல்லாம் வெளிதெரியுமாறு கவனமாகத்தான் இருந்தார், அதில் ஒன்றும் ரகசியமல்ல
ஆனால் 11 ஆண்டு தமிழகத்தை கட்டி எழுப்பியபின் காமராஜரிடம் கேட்டார்கள், அய்யா உங்கள் சாதனையினை விளக்கி விளம்பரம் செய்தால் என்ன?
பட்டென பதில் சொன்னார் காமராஜர்.
“இது என்ன பைத்தியகாரதனம்ணேன், ஒரு தாய் தன் பிள்ளைக்கு கொடுத்த பால் கணக்க வெளில சொல்வாளா?”