விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்குகிறது

Image may contain: text

இன்னும் சில வாரங்களில் உலகின் மிகபெரும் விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்க இருக்கின்றது

இதனால் தகுதி சுற்றுகள் எனப்படும் நெட்டி முறித்து கிளம்பும் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன‌

தென்னமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுமே ஆதிக்கம் செலுத்தும் போட்டி இது

பிரேசில், அர்ஜெண்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளும், ஜெர்மன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ச்சுகல் என ஐரோப்பிய நாடுகளுமே மகா வலுவான அணிகள்

இதில் நேற்று உலக சாம்பியன் ஜெர்மனை பிரேசில் வென்று முகத்தில் குத்திவிட்டது. பிரேசில் விளையாட்டில் அணல் தெரித்தது

இப்பக்கம் அர்ஜெண்டினா மெஸ்ஸி இருந்தும் அதிர்ச்சி தோல்வியினை சந்தித்தது

இவ்வாறாக கால்பந்து விளையாட்டு மெல்ல சூடுபிடிக்க தொடங்கியாயிற்று இரு கண்டங்கள் அதனை கொண்டாடும், மற்ற கண்டங்கள் பார்த்துகொண்டிருக்கும்