விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல

ஆந்திராவில் உள்மாநில அரசியல் சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிறைவைக்கபட்டிருக்கின்றார்

விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல

ஆந்திரா காஷ்மீரை விட தொலைவில் இருப்பதுதான் அதற்கு காரணம் அன்றி வேறல்ல..

இந்தியாவில் எங்கு ஜனநாயகம் மறுக்கபட்டாலும் திமுக பொறுக்காது என்பது ஜகன்மோகன் ரெட்டிக்கும் தெரியவில்லை

திமுக தலைவருக்கு விஷயம் தெரியட்டும் , அதன் பிறகு என்ன ஆகும் தெரியுமா?

ஜெகன் மோகன் ரெட்டியினை ரொட்டியாக்கிவிடுவார்

காஷ்மீர் தலைவர்கள் வீட்டுகாவலில் இருந்தால் பொறுக்கா திமுக, சந்திரபாபு நாயுடுவினை மட்டும் கைவிடுமா என்ன?

இவ்வளவுக்கும் நாயுடு திராவிட இனம்..

இனி திமுக விசாகபட்டினத்தில் போராட கிளம்பும் பாருங்கள், அவர்கள் மானஸ்தர்கள் சும்மா விடமாட்டார்கள்