விஷயம் புரிந்தது இவ்வளவுதான்
எவ்வளவுதான் படித்தாலும் அந்த செய்தி வடிவேலு காமெடி போல் தலையினை சுற்றவைக்கின்றது
விஷயம் புரிந்தது இவ்வளவுதான்
ஒரு திருப்பூர் பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகியிருக்கின்றது, அம்மணியினை தூத்துகுடிக்காரன் அழைத்து வந்து குடித்தனம் நடத்தியிருக்கின்றான், அம்மணி அருகிலே இன்னொருவனுடன் தனிகுடித்தனம் நடத்தியிருக்கின்றது
ஒரு கட்டத்தில் இது தெரியவர அம்மணி இரண்டாமவனுடன் குடித்தனம் நடத்த கிளம்பி, அடுத்தால் ஒருவனுடன் ரகசிய தொடர்பில் இருந்திருகின்றது
அங்கும் சிக்கலாக இது சங்கிலி தொடர்போல 10க்கு மேற்பட்ட கண்ணிகளில் சிக்கியிருக்கின்றது, எவனோ ஒருவன் போட்டு தள்ளிவிட்டான்
இப்பொழுது 10 பேரையும் குந்த வைத்து பின்னிகொண்டிருக்கின்றது தூத்துகுடி காவல்துறை, அவளை விவாகரத்து செய்த முதல் கணவன் மட்டும் நிம்மதியாயிருக்க, லைசென்ஸ் இல்லாமல் ஆளாளுக்கு குடும்பம் நடத்திய அல்லது முயற்சித்த அனைவரும் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார்கள்
கொடுமையிலெல்லாம் பெரும் கொடுமை பெண்ணால் விளையும் கொடுமையே என்பது இதுதான் போலிருக்கின்றது