விஷயம் வில்லங்கமானாலும் ஆகலாம்
அமெரிக்க சீன பொருளாதார யுத்தம் வேறு வடிவினை எட்டியிருக்கின்றது, இருவரும் எதிராளி பொருளுக்கு வரியினை உயர்த்தி அழிச்சாட்டியம் செய்ததே இன்னும் முடியாமலிருக்க அமெரிக்கா தன் பிரத்யோக ஆயுதத்தை வீசியிருகின்றது
ஆம் , ஹாங்காங் மேல் பொருளாதார தடை என அறிவித்துவிட்டது. ஹாங்காங் சீனாவுக்கு உட்பட்ட சுயாட்சி பகுதி, என்பதால் தன்மேல் விதிக்கபட்ட தடையாக அதை கருதி சீன கொதிக்கின்றது
அமெரிக்காவோ அது சீனாவின் பகுதி அல்ல அது தனிநாடு என்பது போல பேசிகொண்டிருக்கின்றது
ஏற்கனவே தைவானை சீனா தன்னில் ஒருபகுதி என்பதும் அமெரிக்கா தைவானுக்கு கொம்பு சீவி சைனாவும் தைவானும் அடிக்கடி முட்டிகொள்வது ஒருவகை
இப்பொழுது ஹாங்காங் எனப்படும் தன் தொப்புள் கொடி கன்றை தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியினை அமெரிக்கா ஒருமாதிரி அணுகுவதை தாய் யானையான சீனா ஒரு மாதிரி கடும் கோபத்துடன் பார்க்கின்றது
விஷயம் வில்லங்கமானாலும் ஆகலாம்