விஷால் பக்கம் இருந்து பதிலே இல்லை
விஷால் பெரும் எச்சரிக்கை போல தியேட்டர்காரர்களுக்கு பல கட்டுபாடுகளை சொன்னார். இலவச குடிநீர் கொடு, பார்க்கிங் காசு வாங்காதே, பப்ஸ் விலை குறை, முடிந்தால் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு வணக்கம் வை, குட்டிகரணம் அடி என்றேல்லாம் ஆயிரம் கட்டளைகளை தியேட்டர்காரர்களுக்கு விதித்தார்
அவர்கள் என்ன வரலட்சுமியா? பொங்கிவிட்டார்கள்
நாம் சொன்னதைத்தான் அவர்களும் மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்கள்
நடிகர்கள் சம்பளத்தை குறைத்து , படபெட்டி விலை குறைந்தால் இதெல்லாம் செய்ய தயார். சம்பளத்தை குறைக்க நீங்கள் தயாரா? என திருப்பி கேட்டிருகின்றார்கள்
அதற்கு விஷால் பக்கம் இருந்து பதிலே இல்லை, எப்படி வரும்?