வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம்

வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம் விவசாயத்தை கைவிட்டதுதான் என எவனாவது சொன்னால் அவனிடம் பேசவே செய்யாதீர்கள் மகா மூடமான கூட்டம் அது

வெனிசுலாவில் இயற்கை வளம் அதிகம், அதைவிட எண்ணெய் அதிகம்

எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் சவுதி, குவைத், பஹ்ரைன் போல அமெரிக்காவுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் வாழலாம்

இல்லை ஈரான் போல வலுவான தலமையும் ஒற்றுமையான மக்களும் இருந்தால் தாக்குபிடிக்கலாம்

இல்லாவிடில் ஈராக், லிபியா போலத்தான் ஆகும்

சதாமுக்கு பின் ஈராக்கும், கடாபிக்கு பின் லிபியாவும் எண்ணெய்க்காக எப்படி அமெரிக்காவால் சூறையாடபடுகின்றதோ அதுதான் சாவேஸின் மறைவுக்கு பின் வெனிசுலாவிலும் நடக்கின்றது

விவசாயத்தை கைவிட்டு என கிளம்புவதெல்லாம் தும்பி கோஷ்டி

கொலம்பியாவும் மெக்ஸிகோவும் விவசாய பூமி , அனுதினமும் மழைகொட்டும் அற்புத பூமி

விதைத்துவிட்டு வந்தால் வானமே நீர்பாய்ச்சு விளைய வைக்கும் சொர்க்க பூமி

ஆனால் விவசாய பொருள் லாபமில்லை என போதை பயிருக்கு மாறி இன்று போதை பொருளின் உற்பத்தி கேந்திரமாக அவை மாறிவிட்டன‌

தாய்லாந்திலும் இந்த சாயல் உண்டு

மிக மிக செழிப்பான பூமிகளே விவசாயம் கைகொடுக்காமல் போதை பயிர்களுக்கு மாறும்பொழுது தமிழக நிலைக்கு எப்படி சாத்தியம்?

இங்கே போதைபயிர் இல்லாமலே தும்பிகள் இவ்வளவு உளறல் இன்னும் போதை பயிர் விளைந்தால் நாடு தாங்குமா?