வெளியுறவு துறை அமைச்சர், அதுவும் ஒரு தூதுவர் என்பவர் பெரும் சாதனைகளை செய்யமுடியுமா?
வெளியுறவு துறை அமைச்சர், அதுவும் ஒரு தூதுவர் என்பவர் பெரும் சாதனைகளை செய்யமுடியுமா? என கேட்டால் விடை மகா பாரதத்திலே இருக்கின்றது
தூது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதுதான் கண்முன் காட்டுகின்றது
யுத்தம் உறுதி என்ற நிலையில் கண்ணனின் அந்த தூதுமட்டும் நடக்காதிருந்தால் அப்பளம் நொறுக்கும் நேரத்தில் பாண்டவ சேனை பஸ்பமாகியிருக்கும், துரியனுக்கு இருந்த பலம் அப்படி
அங்கிருந்த மாவீரர்களும் அவர்களின் தனி வரமும் அப்படி
கண்ணன் தூது என சொல்லி சென்றான், அந்த காட்சி தேவை இல்லை எனினும் அவன் வலிய ஏற்படுத்திகொண்டான்
ஒன்றுமே அறியா அப்பாவி போல் , போரை நிறுத்த செல்லும் எளியவன் போல் அவன் ஆடிய நாடகத்தில் பெரும் விளைவுகள் நடந்தன
விதுரர் மேல் துரியன் சந்தேகம் கொள்ள, இனி இவனுக்காக போரிடமாட்டேன் என வில்லை உடைத்து ஒதுங்கினார் விதுரர், பெரும் பலம் போனது
அங்கே பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் ஈகோ யுத்தத்தை தொடங்கி வைத்தான், அந்த ஈகோ யுத்தத்தில் துரோணரும் கிருபரும் நாமென்ன குறைந்தவர்களா என வசமாக சிக்கினர்
விதுரர் ஒதுங்கினார், பீஷ்மர் இருக்கும் வரை களத்துக்கு வரமாட்டேன் என கர்ணனும் ஒதுங்கினான்
விளைவு பலசாலிகள் சிதறி ஒவ்வொருவராக களத்துக்கு வர வர அவர்களை ஒழிப்பது பாண்டவருக்கு சுலபமாயிற்று
ஆம் தூது என்பதும் தூதுவர் என்பதும் பெரும் ராஜதந்திரம், மாபெரும் திறமைசாலிளன்றி அதை திறமபட செய்யமுடியாது
கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, உருட்டி, பணிந்து, சட்டென கழுத்தை நேரித்து, பாசமாகி தீடீரென அச்சுறுத்தி என ஏக வித்தைகள் காட்ட வேண்டும்
அது ஒரு கலை



அவ்வையார் தொண்டைமானை அப்படித்தான் அச்சுறுத்தி அதியமானை காத்தார்
தூது செல்வதும், தூதராக சென்று விஷயங்களை சாதிப்பதும் எளிதல்ல
வரலாற்றில் மிக சிலரே அப்படி நிற்கின்றனர், அமெரிக்காவில் கிஸ்ஸிங்க, மைக் பாம்பியோ என சிலர் உண்டு
இந்தியாவில் அந்த இடத்தை வெகுசிலருக்கு கொடுக்கலாம், நேரு காலத்தில் அத்துறை குழறுபடியாயிற்று , மொரார்ஜி காலத்தில் வாஜ்பாய் திறம்பட செய்தார் ஆனால் மொரார்ஜி சரியில்லை
இந்திரா காலத்தில் நரசிம்மராவ் ஓரளவு நிரப்பினார்
மோடிகாலத்தில் ஜெய்சங்கர் அதில் மின்னுகின்றார்