வெள்ளை அறிக்கை

ப‌ழனிச்சாமி வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தரவேண்டும் என முக ஸ்டாலின் கேட்டதற்கு பழனிச்சாமி ராஜேந்திர பாலாஜினை சைகை காட்டிவிட்டார்

ராஜேந்திர பாலாஜி அடாவடி ஆசாமி, கிட்டதட்ட ஜெர்மன் ஷெப்பர்டு ரகம், பாய்ந்தால் அவ்வளவுதான்

“என்ன வெள்ளை அறிக்கை? நாங்கள் வெள்ளை, பச்சை மஞ்சள் என எல்லா அறிக்கையும் கொடுப்போம், வெள்ளரிக்காயும் கொடுப்போம்..” என தடாலடியாக பேசிவிட்டார் பாலாஜி

இதெல்லாம் திமுக பாணி பதில் என்பதில் ஆடிபோய் இருக்கின்றது திமுக‌

ஆம் கலைஞர் கருணாநிதி பாணி பதில் இது, ஆச்சரியமாக அதிமுக அவரிடம் இருந்து நிறைய படித்திருக்கின்றது

திமுகவோ அதன் தலமையோ சுத்தமாக ஒன்றுமே அவரிடமிருந்து படிக்கவில்லை

அக திமுக அதிமுகவாகவும், அதிமுக திமுகவாகவும் மாறி கொண்டிருக்கின்றது

இப்பொழுது கலைஞர் கருணாநிதி இருந்தால் எப்படி கலாய்ப்பார் தெரியுமா?

“என்னது? வெள்ளரிக்காய் வாங்கத்தான் லண்டன் , அமெரிக்கா, துபாய் எல்லாம் திரிந்தார்களா?

இதுதான் கொத்தவால் சாவடியிலே கிடைக்குமே?”