வேறு வழி இல்லா அளவு நிலமை மோசமாகின்றது

இனியும் தாக்குபிடிக்க முடியாஅளவு ஈரானின் பொருளாதார தடைகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா எதிர்பார்த்தது இதுதான்

கடுமையான தடைகள் காரணமாக அந்நாடு தவிக்கின்றது, ஈரானின் உள்நாட்டில் சிக்கல் எழுந்து இப்பொழுது விலைவாசியினை அதிகரிக்க தொடங்கிவிட்டார்கள்

பெட்ரோலின் விலை 50% அதிகரிப்பு உட்பட பல அவசர நடவடிக்கைகளில் அத்தேசம் இறங்க மக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர், துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்திருகின்றார்

அமெரிக்கா எதிர்பார்த்தது இதுதான், யானையினை அடக்கமுடியாவிட்டால் வேலிபோட்டு பட்டினி போடு அது அடங்கி ஒடுங்கி தனாய் வழிக்கு வரும் என்பது பொது தத்துவம்

ஈரானை பட்டினி போட்டார்கள், அதன் எதிரொலி கேட்கின்றது, விஷயத்தை ஈரான் எப்படி கடந்து வருமோ தெரியாது, இனி அணு ஆயுதங்களை கடலில் வீசாமல் அவர்களுக்கு வேறு வழி இல்லா அளவு நிலமை மோசமாகின்றது