வேற ஒண்ணுமில்லண்ணே
முன்பொருநாள் பொழுது போகா நேரமொன்றில் தும்பியுடன் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னது
“அண்ணே எங்களுக்கு வேற வழி இல்லண்ணே, எங்களுக்கும் நல்ல கட்சியில சேரணும் 4பேரு நம்மள பார்க்கணும்னு ஆசைன்னே
ஆனா முடியுமாண்ணே, எங்களுக்கு இருக்குற அறிவுக்கும் கையில் காசு இல்லா நிலமைக்கும் ஒரு பயலும் கிட்ட சேர்க்கல
சேர்த்தாலும் பேசவிடல, மேடை பக்கமே விடல, தலைவர் வாழ்கன்னு மட்டும் சொல்ல சொன்னாங்க
எங்களுக்கு அறிவு கிடையாது, யோசிக்க தெரியாது ஆனா எங்களுக்கும் ஆசை இருக்கும்லாண்ணே, எங்களுக்கும் ஒரு மேடை வேணும்ணு ஏக்கம் இருக்கும்லாண்ணே
அறிவு இல்லாட்டியும் காசு இருந்தா அங்க மதிப்பாங்க, அட அது கூட இல்லாட்டியும் ரவுடிசம் பண்ணினா கூட மதிப்பு இருக்கும்ணே
அறிவு, காசு , ரவுடிசம் எதும் இல்லாத எங்கள யாருண்ணே மதிப்பா சொல்லுங்க?
நாங்க இப்படி ஆக இந்த கட்சிங்கதாண்ணே காரணம்..
அதனால எங்கள மாதிரி அறிவே இல்லாத , பேசவே தெரியாத, தெருவுல சண்டை போடுற தகுதி மட்டும் கொண்டவங்களுக்கெல்லாம் அண்ணன் சீமான் அடைக்கலமா தெரிஞ்சார்
அங்க காசு வேண்டாம் அறிவு வேண்டாம், ஒரே தகுதி கத்தணும் நல்ல கத்தணும், அறிவுகெட்ட தனமா கத்தணும்
எவ்வளவு சுதந்திரம் தெரியுமாண்ணே, சில நேரம் பைத்தியகார ஆஸ்பத்திரி மாதிரி தெரிஞ்சாலும் அவ்வளவு சுதந்திரம்ணே கட்டுபாடே கிடையாது
வெளியே கத்தலாம், கட்சிக்குள்ள கெட்ட வார்த்தையில சண்டை போடலாம், யாரும் யாரையும் அவமானமா திட்டலாம்
யாரும் யாரையும் எப்பவும் எவ்வளவும் திட்டலாம்ணே
அவ்வளவு ஏண்ணே அவன் கிடக்கா கிறுக்கு பு.. மவன் என அண்ணனையே திட்டலாம், அவர் பதிலுக்கு போடா கேண பு.. அப்படின்னு சிரிச்சிட்டே சொல்லுவாரு
நல்லா கவனிங்கண்ணே கட்சி மோதல்ல எங்க பெயர் எங்காவது வருமா? வராது
பெரிய கட்சிங்க கூட எங்கள பார்த்து சிரிச்சிட்டே போயிருவாங்க, நாங்க எவ்வளவு கத்தியும் அவங்க அடிக்க வரவே மாட்டாங்க, சிரிச்சிட்டேதான் இருப்பாங்க
இதெல்லாம் எவ்வளவு பாதுகாப்புண்ணே
இப்படி ஒரு கட்சி எங்கயாவது கிடைக்குமாண்ணே, அதுக்குத்தான் அங்க இருக்கோம்ணே வேற ஒண்ணும் இல்லண்ணே
ஏழைக்கேற்ற எள்ளுருண்டைன்னு சொல்வாங்க முட்டாளுக்கேற்ற கட்சி அது, வேற ஒண்ணுமில்லண்ணே”