வேலை வந்தாயிற்று

சென்னை வருகின்றார் மோடி

ஆக வைகோ , திமுக கோஷ்டிக்கு வேலை வந்தாயிற்று

மோடியால் கருப்பு பலூன் செய்பவர்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு தெரியுமா?

கருப்பு கொடி நெய்பவர்களுக்கு அதைவிட பெரும் வேலை வாய்ப்பு

பலூன் சந்தை கூட மோடியால் புத்துயிர்பெற்றிருகின்றது என்பதுதான் மோடியின் சிறப்பு

இதற்குத்தான் தென்கொரியாவில் விருது கொடுத்திருப்பார்களோ?

சொல்லமுடியாது கருப்பு பலூன் செய்வதிலும் பறக்கவிடுவதிலும் தென்கொரிய தொழில்சாலை பங்கும் இருக்கலாம் போல

தமிழக மீடியாக்கள் அது செய்யும் விவாதங்கள் அதில் வரும் விளம்பர பணம், இன்னும் கருப்புகொடி போராட்டங்களையொட்டி நடக்கும் வியாபாரம் என ஏராளமான பிசினஸ் நடக்கின்றது

கவனித்து பார்த்தால் மோடி இல்லாவிட்டால் தங்கள் பிசினஸ் படுத்துவிடும் என்பதால் பலர் அடுத்த பிரதமராகவும் மோடியே வரவேண்டும் என மனதார விரும்புவது போல் தெரிகின்றது