வைகோ கிறிஸ்தவராகிவிட்டார்…

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார், பிரபல போதகர் மோகன் சி லாரசஸ் சொன்னதாக செய்தி

இதனை இன்னும் மோகன் சி.லாரசஸ் மறுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

வைகோ வித்தியாசமான அரசியல்வாதி, இந்திய எதிர்ப்பு என்றே அவரின் அரசியல் அறியபட்டது. மிக பெரும் தலைவராக வந்திருக்க வேண்டிய கோப்பால்சாமி நாசமாய் போக ஒரே காரணம் அந்த இந்திய எதிர்ப்பு

இந்திய எதிர்ப்பாளர்கள் யாரின் கைகூலிகள் என்றால் இப்போதைக்கு இரண்டே பிரிவினர்தான்

ஒன்று சீன ஆதரவு மாவோயிஸ்டுகள். அவர்கள் நாங்கள் மாவோ என தைரியமாக சொல்லும் பிரிவினைவாதிகள்

இன்னொரு கோஷ்டிதான் வில்லங்கமானது, நாங்கள் பிரிவினை வாதி என வெளிப்படையாக சொல்லாது ஆனால் ஈழம், அது இது என எல்லா பிரிவினை கோஷ்டிகளையும் ஆதரித்து நாங்கள் இந்தியர்கள் ஆனால் சில உரிமைகள் .. என முணங்கிகொண்டிருக்கும்

இவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளால் இயக்கபடுபவர்கள் , இதில் சில மிஷினரிகளும் உண்டு, சில அரேபிய அமைப்புகளும் உண்டு.

அரேபிய அமைப்பை விடுங்கள், இப்பொழுது மிஷினரிகளை காணலாம்

வைகோ திருமுருகன் போன்றோர்கள்
அமெரிக்கா லண்டன் பறப்பதும், இந்திய எதிரிகளுக்கு அமெரிக்காவும் லண்டனும் ஆதரவு கொடுத்து பேச வைப்பது எல்லாம் மிஷினரி அரசியல்

விடுதலைபுலிகளுக்கு இந்த மெஷினரிகள் செய்த உதவியும், பின் அதில் ஜெகத் கஸ்பர் போன்ற சாமிகள் ஊடுருவியதும் உலககிற்கே தெரிந்தது

இந்த புலிகள் ஒழிந்து ஏற்பட்ட அழிவின் மத்தியில் இன்று இலங்கையின் வடக்கில் அல்லேலூயா கோஷ்டிகள் போடும் அலப்பறை கொஞ்சமல்ல, அவர்கள் எதிர்பார்த்தது அதனைத்தான்

நக்சலைட் பிண்ணணி இல்லா வைகோ எந்த இந்திய எதிர்ப்பு என நீங்களே யூகித்துகொள்ளுங்கள்

இதில் இவர் இப்பொழுது கிறிஸ்தவர் என ஒப்புகொண்டால் அது டூ லேட். என்றோ கிறிஸ்தவர் ஆகியிருக்கவேண்டியவர் வைகோ

ஒருவேளை உண்மையான திராவிட போராளியாக வைகோ இருந்தால், லாசரஸ் என்ன சொன்னவுடன் வைகோ ஓடிவந்திருப்பார்?

“பாவிகளை மீட்க இயேசு வந்தார்..” என லாசரஸ் சொன்னவுடன், முதல் பாவி நான் தான் என ஓடியிருப்பாரோ?


வைகோ மகன் , மருமகன் எல்லாம் அமெரிக்காவில் கிறிஸ்தவ ஊழியம் செய்கின்றார்கள், வைகோவும் அமெரிக்க சர்ச்சுகளுக்கு செல்வார் : மோகன் சி லாசரஸ்

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு, 26 பேர் பலி : நேற்றைய செய்தி

இந்த மனிதர் எங்கு கால் வைத்தாலும் இப்படித்தான் ஆகும் போல