வைக்கம் போராட்டம் .

வைக்கம் போராட்டம் என்பது வேறொன்றும் அல்ல, இந்த திராவிட கோஷ்டி திராவிட பூமி என சேர்த்து கொண்டாலும் தங்களை எக்காலமும் மலையாளிகளாக கருது திருதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் ஒரு ஊர், அங்கிருக்கும் கோவில் ஒரு சிவன் ஆலயம்

பொதுவாக கேரளாவில் கிருஷ்ண வழிபாடும் , சக்தி வழிபாடும் அதிகம். இந்த சிவன் கோவில் தனித்து இருந்தது குருவாயூர், சபரிமலை போல பெரும் பெயர் அதற்கு இல்லை எனினும் பரசுராமன் தொடர்புடைய ஆலயம்

அந்த ஆலயத்து தெருக்களில் தாழ்த்தபட்ட ஈழத்தவ சமூக மக்கள் நடமாட தடை இருந்தது. நாம் சாதியினை தாங்கிபிடித்து சொல்லவில்லை, இது சாதிகொடுமை அல்ல மாறாக வந்தேறிகள் சிக்கல்

எந்த இனமும் வந்து குடியேறும் இனத்தை எழும்ப விடாது, அதற்கு பல காரணங்கள்

இன்றும் சில ஊர்களில் மண்ணின் மைந்தர்கள் வந்தேறிகளுக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள், கேரளாவில் ஈழத்தவரும் நாடார்களும் வந்தேறிகள் என அறியபட்ட அரசியல் பின் சாதி கொடுமையாக மாறிவிட்டது

அது நெடுநாளாக நீடித்தது, மலையாளிகளில் ஏராளமானோர் போராடினார்கள், அவர்கள் சிறையிடபட்ட பொழுது காந்தியும் அக்கொடுமையினை எதிர்த்து கடிதம் எழுதினார்

காந்தி தலையிட்டால் காங்கிரஸ் தலையிட வேண்டுமல்லவா? அப்பொழுது சென்னை மாகாணா காங்கிரஸ் தலைவர் ராம்சாமி, ராம்சாமிக்கு “கல்யாண வீட்டில் நானே மாப்பிள்ளை, யழவு வீட்டில் நானே பிணம்” எனும் குணம் இயல்பாய் உண்டு

இதனால் ராம்சாமி கிளம்பி சென்றார், 1925ல் ஒரு மார்ச் மாதம் கிளம்பினார்

இங்கு ஒரு தகவலை மகாமுக்கிய செய்தியினை திராவிட குஞ்சுகள் மறைக்கும், ஆம் அந்த வைக்கம் வீதிகளில் பாரதியாரின் பாடல்களை, தேசபக்தி பாடல்களை பாடித்தான் ஊர்வலம் சென்றார் ராம்சாமி

அந்த காங்கிரஸ் பாப்பான் காங்கிரஸ், பாரதி பார்ப்பான் என்பதெல்லாம் ராம்சாமிக்கு தெரியாது ஏனென்றால் இவர் அப்பொழுது தலைவர் அல்லவா?

திருவாங்கூர் அரசு அவரை முதலில் ஒருமாதம் சிறையிட்டது, வெளிவந்த ராம்சாமி பழையபடி பாரதி பாடல் பாடி நடந்தார் இம்முறை 6 மாதம் சிறை

ஆக கவனியுங்கள் வைக்கம் போராட்டத்தை தொடங்கியது ராம்சாமி அல்ல, உரிமை கேட்டு ஓடியதும் ராம்சாமி அல்ல, ராம்சாமி அதில் பத்தோடு பதினொன்று

இதுதான் வைக்க்கம் கதை, “வைக்கம் வீரர்” என்பது வழக்கம் போல் அவரின் சீடர்களே கொடுத்த பட்டம், மாறாக வைக்கம் என்பது நெப்போலியன் ராணுவ கேம்ப் என்றும் ராம்சாமி அதை கைபற்றிய மாவீரன் என்றும் நீங்கள் நினைத்து கொண்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அதுவும் காங்கிரஸுக்கு நெருக்கடி வந்தபின் கட்சி தலைவராக இருந்ததால் வேறுவழியின்றி ராம்சாமி ஓடினார், அவ்வளவுதான் விஷயம்

வைக்கம் தெரிந்த அளவு, சேரன்மகாதேவி குருகுலம் தெரிந்த அளவு வடக்கன் குள கிறிஸ்தவ ஆலயத்தின் சாதி கொடூரம் ஏன் தெரியவில்லை என கேட்க கூடாது, அது பகுத்தறிவு