ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி
இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய சொல்லாதது ஏன்?: ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி
அதாகபட்டது காவேரி மேலாண்மை குழு அமைக்கபடாவிட்டால் அதனை கண்டித்து எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்லி இருந்தார்
இதனைத்தான் சரத்குமார் கண்டிக்கின்றாராம், காவேரி விவகாரத்திற்காக எல்லாம் ராஜினாமா செய்ய கூடாதாம் மாறாக எங்கோ ஒரு அந்நிய நாட்டில் எவனோ ஒரு தீவிரவாதி மக்களை விடமாட்டேன் என பிடித்துவைத்தால் திமுக ராஜினாமா செய்ய வேண்டுமாம்
அன்று திமுக என்ன? மன்மோகன் சிங்கே ராஜினாமா செய்தாலும் ஆகியிருக்கபோவது ஒன்றுமில்லை. சிரிய யுத்தத்தில் டிரம்பே கை பிசைந்து நிற்கின்றார்
இதில் திமுக ராஜினாமா செய்யவில்லையாம்
இப்பொழுது என்ன சொல்ல வருகின்றார் சரத்குமார்? காவேரி பிரச்சினையில் தமிழகம் ஒரு எதிர்ப்பும் காட்ட கூடாது என்கின்றார்
வருமானவரி சோதனை நடந்ததில் டெல்லிக்கு சரத்குமார் பயப்படலாம் , மற்றவகள் ஏன் பயபட வேண்டும்?
ஆனாலும் முன்பு பெங்களூரில் வேலை செய்த பாசம் சரத்குமாருக்கு நிறைய இருக்கின்றது.