ஸ்டாலினுடன் 2 லட்சம் தொண்டர்கள் சிறை செல்ல தயார்

யாரோ ஸ்டாலினுடன் 2 லட்சம் தொண்டர்கள் சிறை செல்ல தயார் என சொன்னதை நம்பி திடீரென மறியல் போராட்டத்தில் குதித்திருக்கின்றார் ஸ்டாலின்

ஆனால் லட்சம் பேர் திரண்டு சிறைசெல்லவில்லை, ஸ்டாலினோடு சில நூறுபேர் கூட இல்லை என்கின்றது செய்திகள்

அவர் கைது செய்யபட்டவுடனாவது மாநிலம் முழுக்க திமுக பொங்கி இருக்க வேண்டாமா? அதுதான் மாலையில் விட்டுவிடுவார்களே? இதற்கேன் போராட்டம் என அவர்கள் போக்கில் இருந்துவிட்டார்கள்

கனிமொழிமட்டும் அதே பாணியில் கைதாகியிருக்கின்றார், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்

இதனால் திமுகவினரை எச்சரித்துவிட்டு போராட்டம் நடத்தும் விதமாக தொடர் போராட்டம் என தேதி சகிதம் சொல்லிவிட்டார் ஸ்டாலின்

இனியாவது லட்சகணக்கான திமுக உறுப்பினர் திரண்டு சிறையினை நிறைத்து உடைக்கட்டும்

இல்லாவிட்டால் இவர்களை நம்பி என்ன போராட்டம் நடத்துவது என்ற மனநிலைக்கு ஸ்டாலின் வந்துவிட கூடும்

“தளபதியே நீ போராடு லடகணக்கான தொண்டர்கள் உன் பின்னால் சிறை நிரப்புவோம் 2 நிமிடத்தில் நிரப்புவோம்..” என கத்திய ஒரு பயலையும் நேற்று காணவில்லை

முதலில் முகநூலில் இருந்து திமுகவினரை அடித்துவிரட்டி களத்திற்கு அனுப்ப வேண்டும், பூரா பயலும் இங்கிருந்து கொண்டு கனவு போராட்டம் நடத்திவருகின்றான்