ஸ்டாலின்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்

செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார்

கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின்

லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் வந்தது, டராவோஸ்கி தலமையில் ஒரு குழு, இன்னும் பல குழுக்கள் அட்டாகசம் செய்தன, சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஜெயாவிற்கு பின்னரான அதிமுக நிலையில் 1924ல் சோவியத் இருந்தது

எல்லாவற்றையும் ஒடுக்கி தனிபெரும் தலைவராக வந்தார் ஸ்டாலின், அவர் மீது சர்ச்சையும் இருந்தது கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மிக வலுவான அரசினை அமைத்தார்

ஐந்தாண்டு திட்டங்கள் என அவர் அறிமுகபடுத்தியதில்தான் , கூட்டுறவு முறை விவசாயத்தில் ரஷ்யா விவசாய புரட்சி கண்டது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தொழிற்துறை, அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் என ரஷ்யா பாய்ச்சலை காட்டியது

பின் தங்கிய ஏழை நாடாக இருந்த ரஷ்யா இப்படி முன்னேறி வந்தபொழுதுதான் ஹிட்லர் எனும் பெரும் அபாயம் உலகில் எழும்பியது. ஹிட்லர் எனும் மந்திரவாதியிடம் எல்லா பூதங்களும் இருந்தன , ஒன்றுமட்டும் இல்லை

அது பெட்ரோல்

அன்று அரேபிய பகுதி பெட்ரோல் அறியபடவில்லை, அது அன்றே தெரிந்திருந்தால் ஹிட்லர் இங்குதான் பாய்ந்திருப்பான். ஈரான் ஈராக் என ஒன்றும் இருந்திருக்காது. அபுதாபி பஹ்ரைன் துபாய் எல்லாம் உருவாகமலே போயிருக்கும்

ஏன் இஸ்ரேலும் இருந்திருக்காது, ஜெருசலேம் சர்ச்சையும் இருந்திருக்காது ஆனால் விதி அது அல்ல‌

ஸ்டாலின் உருவாக்கிய எண்ணெய் சாம்ராஜ்யத்திற்காக ரஷ்யா மீது பாய்ந்தான் ஹிட்லர். ரஷ்யா ராணுவ பலம் கொண்டநாடல்ல என்பது அவன் கருத்து

ஆனால் நெப்போலியனுக்கு குருச்சேவ் தண்ணிகாட்டினார் என்றால், ஹிட்லருக்கு ஸ்டாலின் அட்டகாசமான எதிர்ப்பினை கொடுத்தார். காரணம் ஸ்டாலின் பட்டுமெத்தையில் வளர்ந்தவர் அல்ல மாறாக சிறுவயது முதலே போராட்டம், கலவரம் , போர் என்றே வளர்ந்தவர்

யாராலும் வெல்ல முடியா ஹிட்லரை ஸ்டாலினின் செம்படை விரட்டி அடித்தது, அதுவும் ஜெர்மனியில் புகுந்து ஹிட்லரின் எரிந்த உடலை எடுத்ததும் ரஷ்ய படைகளே

உறுதியாக சொல்லலாம் ரூஸ்வெல்ட்டும்,சர்ர்சிலும் சும்மா அறிக்கைகளை விட்டுகொண்டிருந்த நேரத்தில் ஹிட்லரை நேருக்கு நேர் சந்தித்த வீரன் ஸ்டாலின் ஒருவரே

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின் ரஷ்ய ராணுவத்தை பலபடுத்தினார், அணுகுண்டு முதல் பல விஷயங்களில் ரஷ்யாவினை வலுபடுத்தினார்

பின்னாளைய உலகை மிரட்டிய சோவியத் யூனியன் ஸ்டாலின் போட்ட பாதையில்தான் பயணித்து தன் பொற்காலத்தை அடைந்தது

நிச்சயம் ஸ்டாலின் சர்வாதிகாரி, ஆனால் நல்ல சர்வாதிகாரி ஒரு நாட்டை எப்படி வளபடுத்தமுடியும், பாதுகாக்க முடியும் என்பதற்கு அவரை தவிர யாரையும் உதாரணம் சொல்ல முடியாது

அந்த இரும்பு மனிதன் மீது கலைஞருக்கு பெரும் ஈர்ப்பு இருந்ததால் தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்டார்

ஸ்டாலின் எனும் பெயர்மட்டும் அந்த மகனுக்கு வந்தது மற்றபடி ரஷ்ய‌ ஸ்டாலினின் திறமையில், ஆற்றலில் ஒன்றும் வரவில்லை

உலகின் மறக்கமுடியா இரும்பு தலைவனான, ரஷ்யாவினை மிக உச்சிக்கு கொண்டு சென்ற அந்த ஸ்டாலினின் நினைவு நாள் இன்று

ஜார் மன்னனை வீழ்த்தி ரஷ்யாவினை காத்து, பின் ஹிட்லர் எனும் பெரும் பூதத்தை வீழ்த்தி இந்த உலகினை ஏகாதிபத்திய இனவாதி ஹிட்லரிடம் இருந்து காத்தவர் ஸ்டாலின்

இன்றைய பலமிக்க ரஷ்யாவினை அவனே கட்டி எழுப்பினான், இன்று உலகை மிரட்டும் ரஷ்யாவின் ஆயுதங்கள் எல்லாம் அவன் காலத்தில் அஸ்திவாரமிடபட்டதே

அறிவியலிலும் இன்னும் பல விஷயங்களில் மிக பின் தங்கி இருந்த ரஷ்யாவினை மாபெரும் வல்லரசாக்கி உலகை புரட்டி போட்ட அந்த செங்கொடி நாயகனுக்கு வீரவணக்கம்