ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது
கலைஞரின் உடல்நிலை சரியில்லை என்பது பழையவிஷயம், அதைவிட மகா முக்கியமான விஷயம் என்பது கவனிக்கபடுகின்றது
அதாவது ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது, இருவரும் அங்குதான் இருக்கின்றார்கள் ஆனால் சேர்ந்து அறிக்கை விட்டதாகவோ, இருவரும் ஒன்றாக கலைஞர் உடல்நிலை பற்றி பேசியதாகவோ படமில்லை
படம் என்ன? பேனர் கூட இல்லை
ஆக பிரச்சினை வெடித்திருப்பது தெரிகின்றது, இதில் ஆங்காங்கே வெடியினையும் கொழுத்தி போடுகின்றார்கள்
அழகிரி அந்த பதவி, இந்த பதவி எல்லாம் கேட்கின்றார் என ஆளாளுக்கு ஆருடங்கள்
நடப்பதை பார்த்தால் ஒன்று புரிகின்றது
ஜெயாவிற்கு பின் மன்னார்குடி கும்பலிடம் சிக்கிய அதிமுகவில் துணிச்சலாக பன்னீர் குரலும் அதன் பின் எடப்பாடி குரலும் கேட்டது
“கட்சி என்ன உங்கள் குடும்ப சொத்தா?” என அட்டகாசமாக கேட்டார்கள்
திமுகவில் அப்படி கேட்க யாருமில்லை கேட்கவும் மாட்டார்கள்.
குஷ்பு மட்டும் திமுகவில் இருந்தபொழுது அடுத்த தலைவர் யார் என்பதை திமுகவினரே முடிவு செய்வர் என தைரியமாக சொன்னார், அவரையும் விரட்டினார்கள்
தலைவியின் தைரியம் அப்படி.மற்ற எந்த திமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அந்த தில் இல்லை.
இனி பன்னீரையோ, பழனிச்சாமியினையோ அடிமைகள் என சொல்ல இவர்களுக்கு எந்த தகுதியுமில்லை