ஸ்டாலின் முதல்வர் ஆவார் : வைகோ

ஸ்டாலின் முதல்வர் ஆவார், பெரியார் அண்ணா வாழ்ந்த பூமியில் திராவிடம் தோற்காது : வைகோ சீற்றம்

ஏதும் எழுத்துபிழையா, தவறான செய்தியா என பல முறை பல இடங்களில் படித்து படித்து பார்த்தால், உண்மையிலே வைகோதான் சொல்லியிருக்கின்றார்

ஸ்டாலின் முதல்வராகட்டும் என கலைஞர் சொன்னதைகேட்காமல் தனிகட்சி எல்லாம் கண்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்து ஆம், ஸ்டாலின் முதல்வராகட்டும் என்கின்றார் வைகோ

இதனை ஆரம்பத்திலே ஏற்றிருக்கலாமே

ஆக இந்த சாதாரண விஷயத்தை புரிந்துகொள்ள 27 வருடம் ஆகும் …. லைட்டா வைகோ?

கழகத்தின் போர்வாள் என கொண்டாடபட்ட வைகோ பின் விலகிய பொழுது அது துருபடித்து விட்டது என்றார் கலைஞர்

ஆக அந்த துருபிடித்த வாள், இப்பொழுது கொல்லைபட்டறையில் நெருப்பில் வெந்து , பல இடங்களில் சம்மட்டி அடிபட்டு மறுபடியும் போர்வாளாக முயற்சிக்கின்றது

இதனை காண சகிக்காமல்தான் சிங்கப்பூர் தனி அறையில் முடங்கி கிடக்கின்றார் விஜயகாந்த்.