ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு தேதி நவம்பர் 7ல்
ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு தேதி நவம்பர் 7ல் அறிவிக்கபடும்
சசிகலாவினை சமயம் பார்த்து சாய்த்தது போல திமுக மிகபெரும் பலம் பெரும்பொழுது சாய்க்க தயாராகின்றார்களா?
இல்லை, திமுக தயவு தேவைபடும்பொழுது சொல்லலாம் என பம்முகின்றார்களா? ஒன்றும் புரியவில்லை
ஆனால் இவர்கள் பதுங்குவதில் ஒன்று புரிகின்றது
அதிமுகவினை அடித்து நொறுக்கியது போல, திமுகவினை செய்ய முடியவே முடியாது. எந்த மிரட்டலுக்கும் அது அஞ்சாது, அதனை நெருங்குவதே மிக கடினம் என்பதுதான் அது.
அந்த பயம் டெல்லியிடம் மிகுந்திருப்பதைத்தான் இம்மாதிரியான பதுங்கல்கள் காட்டிகொண்டே இருக்கின்றன.
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்பார்கள்
ஆனால் அது நீதிமன்றத்திற்கு பொருந்தாது. நீதிமன்றம் தகுந்த ஆதாரமிருப்பின் உடனே பாய கூடியது
இவர்கள் ஒரு மாதிரி ஒதுங்குவதை கண்டால் அங்கு ஒன்றுமே இருக்காது போல..