ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான்
ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான்
அவர்கள்தான் எதற்குமே இனி மானியமில்லை எனும் நிலைக்கு வந்தாயிற்றே, எல்லா மானியங்களும் வெட்டுபடும் பொழுது , ஹஜ் பயணிகள் மானியமும் ரத்தாகின்றது
செல்வத்திலும், எண்ணேய் பணத்திலும் கொழிக்கும் வளைகுடா நாடுகள் குறிப்பாக சவுதி தன் நாட்டுக்கு வரும் மக்களின் பயணத்திற்கு மானியம் கொடுத்தால்தான் என்ன?
இறைவன் கொடுத்திருக்கும் எண்ணெய் பணத்தினை, அவனின் புனித இடங்களை தரிசிக்கவரும் மக்களின் விமான செலவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் கொடுக்கலாம்தான். ஆனால் செய்யமாட்டார்கள்.
சரி இது மானியவெட்டு பிரச்சினை, எல்லா மானியமும் இனி வெட்டபடுமாம்
அப்படி இங்கு தங்கியிருக்கும் அந்நிய நாட்டு மக்களான ஈழமக்களுக்கான உதவிகளும் நிறுத்தபடலாம், போர் முடிந்தபின்னும் இலங்கை மக்களுக்கு இங்கு என்ன அவசியம்?
அது விரைவில் நடக்கும், ஆக அங்கிள் சைமன், எனர்ஜியினை வீணாக்கவேண்டாம், காரணம் ஓங்கி கத்த ஈழ அகதிகளுக்கான உதவிகளை நிறுத்தி இலங்கைக்கு அனுப்ப எப்பொழுதும் உத்தரவு வரலாம்..