ஹவாலா பணம்?

இந்த தேர்தல் வந்தாலும் வந்தது, ஹவாலா பணம் உட்பட பல தொழில்களில் இருப்பவர்களுக்கு ஏக சிக்கல். தேர்தல் கமிஷன் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் அந்த பணமே

மற்றபடி நம் அரசியல்வாதிகளாவது சிக்குகின்றதாவது?

“உங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மரத்தடியினை தோண்டுங்கள், மண்பானையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் எங்களுக்கு வாக்கு செலுத்திவிட்டு வந்தால் அடுத்த புதையல் இருக்குமிடம் சொல்வோம்” என்று இப்பொழுதே புன்னகைகின்றார்களாம் சில கட்சியினர்

அதாவது பணம் எல்லாம் ஏற்கனவே சென்றாயிற்று

இது போக மளிகை ஜவுளி வியாபாரிகளை சரிகட்டி வேறுவகையிலும் , இன்னும் திருமண வீடு போன்ற விஷேச வீடுகளிலும் புகுந்து ஆடுகின்றனர் அரசியல்வாதிகள்

இப்பொழுது பிடிபடுவது பெரும்பாலும் ஹவாலா பணம் என்கின்றது செய்திகள்

தேர்தல் கமிஷன் மேல் ஹலாவா கோஷ்டிகளும், இந்த பொள்ளாச்சி கும்பல் மேல் (பெண்கள் அல்ல) இன்னும் சில கோஷ்டிகளும் ஏக கோபத்தில் இருப்பதாக கூடுதல் செய்திகள் தெரிவிக்கின்றன