ஹாங்காங் பற்றி எரிகின்றது
ஹாங்காங் பற்றி எரிகின்றது, நிச்சயம் அந்த போராட்டத்துக்கும் கலவரத்துக்கும் சீனா காரணம் அல்ல
ஆம் ஹாங்காங்கின் பொருளாதார நிலை சீனாவுக்கு சாதகமாக இருத்தல் வேண்டும், சீனாவில் ஹாங்காங்க் நேரடியாக கலந்தால் அது வீழும் என கணக்கிட்ட சீனா கன கச்சிதமாக அதை கையாண்டது
சீனாவின் பிடியில் இருந்தாலும் ஹாங்காங் தன்னாட்சியிலே இயங்கியது, ஹாங்காங்கை காட்டி தன் தென்பகுதியில் தொழில் வளர்த்தது சீனா
இப்பொழுது என்னாயிற்று சில திருத்தங்களைத்தான் செய்தது
அதாவது ஹாங்காங் என்பது ஒருமாதிரியான சந்தை, யாரும் செல்லலாம் சம்பாதிக்கலாம், சுருட்டலாம் அல்லது சுருட்டியதை ஹாங்காங்கில் கொட்டலாம்
சுருக்கமாக சொன்னால் குறுகியகாலததில் பெரும் பணம் பார்க்கும் தீவு அது, இன்னொரு பக்கம்கருப்பு பணத்தின் குவியல்
சீனா இதை ஒழுங்குபடுத்தியது இனி தவறு செய்வோர் யாராயினும் அகப்படுவர் என் சட்டத்தை திருத்தியது
அவ்வளவுதான் சுகபோக கார்ப்பரேட்டுகளும் திருட்டு தொழிலதிபர்களும் ஹாங்காங் மக்களை பயமுறுத்தி உங்கள் வாழ்வு போயிற்று, நாசமாயிற்று என போராட தூண்டி களபேரங்களை நிகழ்த்துகின்றனர்
பெரும் பரகாசுர கம்பெனிகள் நினைத்தால் எதுவும் சாத்தியம், பொருளாதார வில்லன்கள் மேல் கைவைத்தால் அவர்கள் எப்படி எல்லாம் போராட்டங்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவார்கள் என்பதற்கு ஹாங்காங்கே சாட்சி
இந்தியாவிலும் அது தெரிகின்றது
பெரும் கம்பெனிகள் தாங்கள் அரசின் கிடுக்கிபிடியில் சிக்கிவிட்டதை தந்திரமாக பொருளாதாரம் போயிற்று, தொழில் போயிற்று கம்பெனியினை மூடுகின்றோம் என ஒருவித அரச எதிர்ப்பினை இங்கு ஏற்படுத்த முயல்கின்றார்கள்
ஹாங்காங்கில் நடப்பதை போல இங்கும் சில விஷயங்களை நடத்தி இந்த அரசை விரட்டி தாங்கள் முன்பு ஆட்டம் போட்டதை போல ஆட நினைக்கின்றன
அதற்கு ஊடகங்களும் துணை செல்கின்றன
ஹாங்காங்கிலிருந்து இந்தியா பாடம் கற்பது நல்லது, முன்னெச்செரிக்கை தேவை