ஹாங்காங் போராட்டம் இன்னும் முழுமையாக ஓயவில்லை
ஹாங்காங் போராட்டம் இன்னும் முழுமையாக ஓயவில்லை அல்லது ஓயாது
அதன் பின்னணி வேறுநாடுகளில் இருந்து தூண்டிவிடபடுகின்றது எனபது எல்லோருக்கும் தெரியும், அது சீனாவுக்கும் தெரியும்
சில விவகாரங்களில் சீனா விட்டுகொடுத்தாலும் ஹாங்காங் பிரிட்டன் காலத்தில் இருந்த சலுகைகளை திரும்ப கேட்கின்றது, சீன அரசு கொடுப்பதாக இல்லை
ஹாங்காங் சீனாவின் வடக்கேயோ, கிழக்கேயோ இருந்தால் என்றோ நசுக்கி இருப்பார்கள், கேந்திரமும் பொருளாதாரமும் வல்லரசுகள் பார்வையும் உள்ள இடம் என்பதால் விட்டு ஆடுகின்றது சைனா
நேற்று ஹாங்காங் பல்கலைகழகத்தை போராட்ட குழு கைபற்றி மிரட்டியிருக்கின்றது, பல்கலைகழகத்தின் உள்ளிருந்து கல் எறிவது, அம்பு எறிவது இன்னும் பல கலவரங்களை செய்துவிட்டு கல்லூரிக்குள் ஓடுவது என விஷயம் பரபரப்பாகின்றது
சீன காவல்துறை அதை சுற்றிவளைத்திருக்கின்றது, இனி உள்ளே புகுந்து அடித்த்து துவைத்து கலவரத்தை அடக்குவார்கள் என்பது உலகறிந்தது

இந்திய அரசும் சற்றும் தயங்காமல் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக அழிச்சாட்டிய கோஷ்டி மேல் அம்மாதிரி கடும் நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டு வாய்ப்பில்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கட்டும்
கம்யூனிச நாடான சீனாவில் மேற்கத்திய சக்திகள் குழப்பம் செய்கின்றன, ஜனநாயக நாடான இந்தியாவில் கம்யூனிஸ்டுகளால் குளறுபடி, டெல்லி பல்கலைகழக காட்சி அதுதான்