ஹாங்காங் விவகாரம் வேறுமாதிரி திரும்புகின்றது
ஹாங்காங் விவகாரம் வேறுமாதிரி திரும்புகின்றது
இந்தியா மலேசியா சிங்கப்பூர் என பிடித்த பிரிட்டனுக்கு சீனா மேல் கவனம் திரும்பியது
எப்பொழுதுமே ஒரு தீவினை பிடித்து அதிலிருந்து உள்ளே ஊடுருவது பிரிட்டானிய ஸ்டைல்
இந்தியாவில் மும்பையில் தளம் அமைத்து அப்படி ஊடுருவினார்கள், மலேசியாவில் பினாங் தீவு என ஏகபட்ட உதாரணம் உண்டு
1890களில் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் கடும் போர் மூண்டது, அபினை நாட்டுக்குள் பிரிட்டன் ஊடுருவசெய்து சீன சமூகத்தை கெடுக்கின்றது என்ற போர் அது
சீனாவுக்குள் பிரிட்டானியரால் செல்லமுடியவில்லை, கடல்போரில் பிரிட்டனை வெல்ல சீனாவாலும் முடியவில்லை
இறுதியில் ஹாங்காங் தீவினை 100 வருட குத்தகை என பிரிட்டனுக்கு கொடுத்துவிட்டு அவமானத்தால் தன் சிறிய கண்களை துடைத்துகொண்டார் சீன மன்னர்
ஹாங்காங்கில் இருந்துகொண்டே சீனாவினை விழுங்கும் திட்டம் பிரிட்டனுக்கும் என்றேனும் ஒருநாள் ஹாங்காங்கை திரும்ப பெற்று அவமானத்தை துடைக்க வேண்டும் என சீனாவும் கங்கணம் கட்டின
எதிர்பாரா உலகபோர்கள், மாவோவின் எழுச்சி, செஞ்சீனம் என பிரிட்டன் நினைத்தது நடக்காமல் போக ஹாங்காங்கும் ஒப்பந்தபடி சீனாவோடு இணைந்தது
பெரும் வளர்ச்சி கொண்ட ஹாங்காங்கை தனி தன்னாட்சி பிரதேசமாக சீனா கையாளும் பொழுதும் அது சீன பகுதியே
இப்பொழுது சீனா சில கட்டுபாடுகளை விதிக்க தொடங்க போராட்டம் வெடிக்கின்றது, சீனாவின் இறுக்கமான கட்டுபாட்டுக்குள் செல்ல ஹாங்காங் வாசிகள் விரும்பவில்லை
ஹாங்காங் சீனாவின் பகுதி எனும்பொழுதும் அதை வளர்த்தது பிரிட்டன், பிரிட்டனின் ஏகபட்ட முதலீடுகள் அங்கு உண்டு புகழ்பெற்ற கதே பசிபிக் ஏர்வேஸ் உட்பட
6 மாதமாக நடக்கும் ஹாங்காங் போராட்டத்தை இதுவரை பிரிட்டன் அமைதியாக கண்காணித்தது ஆனால் ஏதும் பேசவில்லை
இப்பொழுது பிரிட்டன் பிரதமராகியிருக்கும் போரீஸ ஜாண்ஸன் டிர்மப் வகையறா, அதாவது உலகெல்லாம் வம்பு செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர்
அவர் ஹாங்காங் போராட்டத்தை பிரிட்டன் தலையிடும் இடமாக மாற்றபார்க்கின்றார், அவர் பேசவில்லை மாறாக அவர் அனுமதியுடன் அவர் அமைச்சர் பேசுகின்றார்
ஹாங்காங்கில் தலையிட பிரிட்டனுக்கு முழு உரிமை உண்டு என்கின்றார் அவர்
பிரிட்டனில் சுதந்திர ஹாங்காங் எனும் கோரிக்கை வலுக்கின்றது, காரணம் பிரிட்டானிய முதலீடுகள் அப்படி
ஹாங்காங் பிறப்பில் சீன குழந்தை ஆனால் அதை அரக்கனாக பலமாக வளர்த்தது பிரிட்டன்
பழைய உறவில் பிரிட்டன் வருமா? இல்லை உரிமையினை சீனா விட்டுகொடுக்காமல் போராடுமா என்றால் சீனா விடவே விடாது
ஹாங்காங் அவர்கள் தன்மானத்தில் விழுந்த அடி, அதை ஒருநாளும் மறக்கமாட்டார்கள், கிஞ்சித்தும் விட்டுகொடுக்கமாட்டார்கள்