ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள்
ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள்
இன்றுதான் மிகபெரிய கொலைமுயற்சியில் இருந்து தப்பினார், அல்லது விதி அவர் பயங்கர ஆட்டம் போட ஒத்துழைத்தது. ஒருமனிதன் தன் கர்மபலனை அனுபவிக்காமல் சாகமாட்டான் அல்லது குறித்தகாலம் வரும்வரை அவனை கொல்லமுடியாது என்பது அதுதான்
அது 1939ம் ஆண்டு, அன்று பிரிட்டன் வல்லரசு. அமெரிக்கா கனடா போன்ற செழிப்பான நாடு , ரஷ்யா கம்யூனிச கோட்பாடுகளை பரிசோதித்துகொண்டிருந்தது
ஹிட்லர் உலகை மிரட்ட தொடங்கியிருந்தார், அவரை கண்டு ஐரோப்பா அச்சபட்ட நேரம்
ஆம் வெறும் மிரட்டலில் போலந்தையும், ஒரு துப்பாக்கி கூட வெடிக்காமல் செக்கோஸ்வோவாகியாவையும் கண் அசைவிலே அதன் அடுத்தநாட்டையும் பிடித்து முன்னேறினார்
இனி பிரிட்டனை நிச்சயம் பிடிப்பார் என அச்சபட்ட பிரிட்டன் உளவுதுறை அவரை தொடக்கத்திலே போட்டுதள்ள முடிவெடுத்தது
ஹிட்லரின் பிரதான முகாம் பருந்து குகை எனப்பட்ட முகாம், கடும் பாதுகாப்பு மிகுந்த இடம் அது, அவரின நெருங்கிய அதிமுக்கிய தளபதிகள் மட்டும் நுழையும் இடம் அது
அங்குதான் தன் ராணுவ திட்டங்களை வகுப்பார் ஹிட்லர், அப்படி அன்று விளக்க வேண்டிய நாள்
அவர் நாற்காலி அருகே வெடிகுண்டு பெட்டியினை வைத்தார்கள், சந்தேகம் கொள்ளா ஹிட்லர் வந்து அமர்ந்து தன் யுத்த வியூகத்தை விளக்கினான்
வரலாற்றில் ஹிட்லரின் வியூகங்கள் ஆச்சரியமானவை, நெப்போலியனுடையது போன்றவை
தன் திட்டத்தை விளக்கிகொண்டே அவன் எழுந்தபொழுது காலில் இடித்தது அந்த வெடிகுண்டுபெட்டி
இந்த யழவு பெட்டியினை இங்கே வைத்தவன் எவன் என சொல்லியபடியே காலால் மிதித்தான் அது தள்ளி சென்றது
மீண்டும் வரைபடத்தை அவன் விளக்க அங்கும் இங்கும் நடந்தபொழுது அந்த பெட்டி மறுபடியும் இடித்தது , அட சனியனே தொலைந்து போ என வேகமாக மிதித்து தள்ளினான் ஹிட்லர்
அந்த பெட்டி அறையின் மூலைக்கு சென்றது
அவன் பாடம் நடத்திகொண்டிருக்கும் பொழுதே அது வெடித்தது, அதிர்ந்து நின்றான் ஹிட்லர், ஆம் அது அவன் காலடியில் வெடித்திருந்தால் அவன் காலி, யூதருக்கும் தனி நாடு இல்லை இந்தியாவுக்கும் இல்லை
தனக்கான குண்டு தன் முன்னே வெடிப்பதையும் அதை தானே தன் காலால் உதைத்து தப்பியதையும் பார்த்துகொண்டே இருந்தான் ஒன்றும் பேசவில்லை
மறுநாள் அவனின் பாதுகாப்பு குழுவே கர்த்தரிடம் அனுப்பபட்டது , ஒரு நர்ஸை ஹிட்லர்முன் அமர்த்தினார்கள், அவள் உண்டபின்புதான் அவன் உண்பான்
அவள் மேல் பாசமெல்லாம் இல்லை, அவள் உண்டு அவள் சாகவில்லை உணவில் விஷம் இல்லை என உறுதியானபின்பே உண்டான், அவ்வளவுக்கு அஞ்சினான்,
இது போக 6 முயற்சி உண்டென்றாலும் இது சுவாரஸ்யமானது


அடுத்த 6 ஆண்டுகளில் தன் துப்பாக்கியாலே செத்தான் ஹிட்லர்
இதுதான் விதி, அந்த குண்டுவெடிப்பில் அவன் செத்திருக்க வேண்டும் ஆனால் அவன் காலே அப்பெட்டியினை உதைத்து தள்ளி அவனை தப்ப வைத்தது,
ஆனால் நேரம் வந்தபொழுது அவன் கரமே அவன் தலையில் துப்பாக்கியினை வைத்தது
நல்லவனோ கெட்டவனோ அவன் பிறக்கும் நோக்கத்தின் காரியங்களை முடிக்காமல் கிளம்பமாட்டான் என்பது இதுதான், நமக்கும் மேலே ஒரு சக்தி முடிவு செய்யும் விஷயம் இது.
(ஹிட்லரின் இந்த படத்தை பார்த்துவிட்டு அதாவது புலிபடத்தை பார்த்துவிட்டு அதை காப்பியடிக்கும் பூனை அல்லது டைனோசரை பார்த்துவிட்டு அதுபோல தலையாட்டும் ஓணானை பார்க்காவிட்டால் எப்படி?
இதோ பாருங்கள்..
அன்னாருக்கு எல்லாமே காப்பி, சுய அறிவு என்பது ஒருகாலமும் இல்லை)