ஹிஹிஹிஹீஹ் நாம ஐந்தாவது
நாயகன் படத்தில் ஒரு காட்சி வந்தது, எல்லா கடத்தல்காரர்களும் கூடியிருந்தார்கள். கமலஹாசனும் ஜனகராஜும் வந்தார்கள், ஜனகராஜ் சொன்னார்
“வேலு இவனுக 4 பேரும் பெரிய ஆளுங்க, இவனுக கடத்தாத பொருள் கிடையாது, இவனுகள தேடாத போலிஸ் கிடையாது, இவனுக சொத்துக்கு கணக்கே கிடையாது, பொல்லாதனுங்க
ஹிஹிஹீஹ்ஹிஹிஹிஹி நாம ஐந்தாவது”
இதனை பார்த்தபொழுது அங்கிள் சைமனின் தும்பிகள் இப்படித்தான் அங்கிள் சைமனிடம் சொல்லிகொண்டிருப்பார்கள் என தோன்றியது
“அண்ணே இந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக எல்லாம் திருட்டுபயலுக. இவனுக சொல்லாத பொய் கிடையாது, செய்யாத ஊழல் கிடையாது, பயங்கர மோசமானவனுங்க
ஹிஹிஹிஹீஹ் நாம ஐந்தாவது”
என் மகன் ஊழல் செய்யவில்லை அதனால் விசாரணை நடத்த தேவையில்லை : அமித் ஷா
அதுதான் மிஸ்டர் ஷா, அவர் ஊழல் செய்யவில்லை அல்லவா? பின் விசாரணை கமிஷன் முன் வர என்ன தயக்கம்?
“என் மகன் குதிருக்குள் இல்லை” என புதிய பழமொழி சொல்லிகொண்டிருக்கின்றார் அமித் ஷா