ஹேக்கிங் நடந்ததா
கூடங்குள அணுவுலையில் சைபர் அட்டாக் எனப்படும் ஹேக்கிங் நடந்ததா என பலத்த சர்ச்சை இப்பொழுதுதான் கிளம்புகின்றது
நாம் இதை நேற்றே சொல்லியிருந்தோம் , அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். முக ஸ்டாலினும் அதுபற்றி கேட்டிருந்தார்
அதுவரை அமைதிகாத்த அணுமின் நிலையம் நேற்று மெதுவாக அணுவுலைக்கு வெளியில் இருந்த வாட்ச்மேன் வைத்திருந்த கருப்பு வெள்ளை கம்பியூட்டரில் வைரஸ் புகுந்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் முடித்துவிட்டார்கள்
நிச்சயம் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமாட்டார்கள், உண்மையினை சொல்லவும் மாட்டார்கள்
ஆக ஏதோ நடந்திருப்பது உண்மை
இந்த சைபர் தாக்குதலால் அணுவுலைக்கு ஆபத்தா என்றால் இல்லை, அவ்வளவு சொத்தைகாக அணுவுலைகள் அமைக்கபடாது மாறாக தகவல்களை திருடலாம்.
மிக முக்கியமான தகவல்கள் லீக் ஆகலாம் என்பதுதான் உண்மை
என்ன தகவலாக இருக்கும்?
கூடங்குளம் அணுவுலை இயங்கவே இல்லை, உள்ளே உட்கார்ந்து எல்லோரும் சீட்டு விளையாடுகின்றார்கள் எனும் ரகசிய தகவலாக இருக்கலாம். அது பராமரிப்புக்காக அடிக்கடி மூடபடுகின்றது எனும் செய்தி அடிக்கடி வரும்பொழுது அப்படித்தான் தோன்றுகின்றது
சரி, ஒருவழியாக ஒரு கம்பியூட்டரில் வைரஸ் புகுந்துவிட்டது என்பதோடு நிறுத்திகொண்டார்கள்,
இதற்கு நம் அரசியல்வாதிகள் “வைரஸுக்கு மருந்து மாத்திரை கொடுத்தீர்களா? ஏன் முன்பே தடுப்பு ஊசி போடவில்லை. இதற்கு காரணம் மருத்துவர்கள் ஸ்ட்ரைக், ஆக பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்” என கிளம்பாவதை வரை நல்லது.
