10ம் வகுப்பு தேர்வின்முடிவுகள்

பள்ளி கல்வி துறையில் இந்த பொறியியல் கல்லூரி கூட்டு களவாணிகளின் கரம் இருக்கின்றது என சில செய்திகள் சொல்லும், நம்ப முடியவில்லை

ஆனால் 10ம் வகுப்பு தேர்வின்முடிவுகள் அதை நம்பவும் சொல்கின்றன‌

அப்படி என்ன நடக்குமாம்?

பத்தாம் வகுப்பில் மதிப்பெண்ணை அள்ளி போட வேண்டுமாம், 35 மார்க் எடுக்க வேண்டியவனை 90 வரை உசுப்பிவிட்டால் 11ம் வகுப்பில் தானே முதல் பிரிவில் சேர்ந்துவிடுவானாம்

நிச்சயம் அதுதான் நடக்கும்

+1, +2 அவனை கரும்பு சக்கையாய் பிழிய வேறு எங்கு செல்வான், தானாகவே பொறியியல் கல்லூரி வாசலில் வந்து விழுந்து கிடப்பான்

10 வகுப்பில் கடந்த்த சில ஆண்டுகளாக 450க்கு மேல் மார்க் எகிறுவதும், 498 என்றெல்லாம் வருவதும் இதனால் என்கின்றது ஒரு ரகசிய ஆய்வு

இதுதான் உண்மை என அடித்து சொல்கின்றார்கள்

ஒருபக்கம் இல்லை 10ம் வகுப்பு எளிதான பாடம் என்கின்றது, எனினும் இப்பொழுதுள்ள மாணவர்களின் படிப்பு சூழல் வேறு, இன்னபிற திறமைகள் வேறு என்பதால் அந்த பாடதிட்டத்தை மாற்றி சற்று கடினமாக்கினால் நல்ல விஷயமே

இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் 490 அதிகபட்ச மதிப்பெண் 500 என இருக்கும்