1857ம் ஆண்டு

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் தொடங்கிற்று

என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான்

ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது

எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் பின்பே பல சீர்திருத்தம் தொடங்கபட்டு அது 1947ல் சுதந்திரமாக முடிந்தது

1857ல் நடந்ததுதான் முதல் இந்திய விடுதலைபோரா என்றால் இல்லை, 1500களில் வாஸ்கோடகாமா கால் வைத்ததில் இருந்து அவனை கொன்று இத்தேசம் தன் போராட்டத்தை தொடக்கியது

வீரசிவாஜி ஐரோப்பியரை தன் கப்பல் படையால் மிரட்டி அடக்கி வைத்திருந்தான், அவனுக்கு பின்னரான காலங்களில் மராத்திய இந்து பேரரசின் இந்து மன்னர்களுக்கும் ஆப்கானிய மொகலாயர்களுக்கும் தீரா போர்கள் ஏற்பட்டன‌

சிவாஜிக்கு பின் சாம்பாஜியினை அவுரங்கசீப் ஒழித்து கட்டினாலும் சிவாஜி இளையமகன் ராஜாராமின் மனைவி மிகபெரும் பாய்ச்சலை காட்டினாள், மொகலாய சாம்ராஜ்யம் அவளால் ஆடியது

அந்த நேரம் பெர்சியாவின் மன்னன் நாதிர் ஷா மொகலாயரை அடித்து வீழ்த்தி மயிலாசனம் கோஹினூர் வைரம் உள்ளிட்டவைகளை பெர்ஷியா எனும் ஈரானுக்கு கடத்தி சென்றான், இது 1738ல் நடந்தது

அதன் பின் மொகலாய அரசு படுகுழியில் வீழ்ந்து மராட்டியரோடு தற்காப்பு யுத்தத்தில் தவித்தது, அந்நேரம் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தும் சக்தியினை இழந்தது, அவர்களை முழுவதுமாக முடக்க இந்து அரசுகள் கங்கணம் கட்டி நின்றன‌

சீக்கிய அரசும் ஆப்கானுக்கும் டெல்லிக்கும் இடையே அரணாக எழும்பி நின்றது, மொகலாயம் அதில் தள்ளாடியது

பாரத கண்டமெங்கும் சிறு சிறு சாம்ராஜ்யங்கள் தோன்றின அவை மொகலாயத்திடம் இருந்து தங்களை விடுவித்ததாக அறிவித்தன‌

மொகலாயருக்கு அடங்காத நவாப்களை நாங்களும் ஏற்கமுடியாது என புலித்தேவன் கட்டபொம்மன் போன்றோர் போர்கொடி தூக்கினர்

இந்த இந்து அரசர்கள் நவாப்புக்கள் மோதலில் நடந்த குழப்பத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் உள்ளே வந்தான்

அவனும் தானாக வரவில்லை மொகலாயருக்கும் மராட்டியருக்குமான யுத்தத்தில் புகுந்து இந்தியாவில் பிரான்ஸ் ஆட்சியினை நிறுவ விளைந்த குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற நினைத்த பிரான்ஸின் டூப்ளே அவனை இழுத்து வந்தான்

வடக்கே பெரும் யுத்தம் நடக்க, அந்த யுத்த வீச்சு அதிகமில்லா தமிழகத்தில் மெல்ல காலூன்றினர் பிரிட்டிசார், பின் வங்கத்திலும் தன் அரசை நிறுவினான் கிளைவ்

கிளைவ் கொடுத்த் அடிதளத்தில் மொகலாயர் இந்துக்கள் மோதலில் இந்துக்களை சேர்த்து கொண்டு மொகலாயரை வீழ்த்தி மொத்த தேசத்தையும் வளைத்தனர் வெள்ளையர்

அப்பொழுது அது கிழக்கிந்திய கம்பெனியின் சொத்தாக இருந்தது

மொகலாயருக்கும் இந்துக்களுக்கும் எதிரான போராட்டத்தில் வெள்ளையன் ஆட்சிக்கு வந்ததை அறிந்த இந்துக்கள் மிலேச்ச ஆட்சியினை ஒழிக்க வெள்ளையனோடு கடுமையாக மோதினார்கள், அந்த போராட்டத்தில் இஸ்லாமியரும் கலந்து கொண்டார்கள்

அந்த போராட்டம் ஒருபக்கம் நடக்க பிரிட்டிசாரும் இந்தியாவில் படை திரட்டி ஒரு விபரீத திட்டத்தில் இறங்கினார்கள்

இந்திய அடிமை வீரர்களுடன் திபெத், ஆப்கன் என அக்கம்பெனி கடும் யுத்ததில் இருந்த நேரம். ஆப்கனையும் பிடித்து , அப்படியே உஸ்பெக் பிடிது, ரஷ்யா பிடித்து ஐரோப்பா வரை செல்லும் பெரும் கனவு அவர்களுக்கு வந்தது

காரணம் ஐரோப்பாவிற்கு நிலவழிச்சாலை துருக்கி வழியாக ஐரோப்பா சென்றது, அது அப்பொழுது ஆட்டோமான் துருக்கியர் வசம் இருந்தது, வலுவான அரசு அது, பிரிட்டிசாரை சுக்குநூறாக்கும் பலம் அவர்களிடம் இருந்தது.

பலசாலியிடம் ஒருநாளும் மோதமாட்டான் பிரிட்டிஷ்காரன், இதோ இப்பொழுது சிரியாவில் யாராவது ரஷ்யாவிற்கு எதிராக இறங்குவார்களா? ம்ஹூம்.

இதனால் பட்டுசாலையினை குறிவைத்து திபெத்தையும், நிலம் வழியாக ரஷ்யாவினை அடைவதற்காக ஆப்கனையும் குறிவைத்து கம்பெனியின் யுத்தம் நடந்தது

அப்படி ஆப்கன் போரில் புதுவித தோட்டாக்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு கொடுத்தார்கள், அன்று கீரீஸ் ஆயில் இல்லை, அதனால் தோட்டா சுலபமாக வெளியேற பசு கொழுப்பு அல்லது பன்றிகொழுப்பு பூசபட்ட தோட்டாக்களை கொடுத்தார்கள், சில நேரங்களில் அந்த உலோக உறை பற்களால் இழுக்கபடும் அவசியமும் இருந்தது.

பசு கொழுப்பு இந்து வீரன் வாயிலும், பன்றி கொழுப்பு இஸ்லாமிய வீரன் வாயிலும் பட முடியுமா? பட்டால் சும்மா இருப்பார்களா?

அதுதான் பெரும் கலவரமாயிற்று

அந்த கலவரத்தின் இடையே இந்து சமஸ்தானங்கள் இது சரியான நேரம் என கலவரகாரர்களோடு சேர்ந்து பிரிட்டிசாரை விரட்டி அடிக்க முயன்றன‌

அந்த சமஸ்தானங்களில் வீரசிவாஜி அரசுகளின் ஒன்றான ஜான்சி ராணி போன்றோர் முக்கியமானவர்கள், சிவாஜியின் இந்து ராஜ்ய கனவு அங்கும் கைகொடுத்தது

எனினும் அவர்கள் முயற்சி தோற்றது அதற்கு காரணம் பல இருந்தன‌

முதலாவது பிரிட்டிசாரின் ஒருங்கினைப்பும் தகவல் தொடர்பும் நாடெங்கும் ஒரே வலையில் இருந்தன சரியான வலை அமைப்பும் கட்டளைமையங்களும் சரியாக இருந்தன‌

ஆனால் இந்தியரிடம் அப்படி ஒருங்கிணைப்பு இல்லை சரியான தலமையும் முறையான வழிநடத்ததுதலும் இல்லை

எனினும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அந்த 1857ல் ஆடிபோனது நிஜம், அதன் பின் பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவினை தன் கட்டுபாட்டில் எடுத்தது அடுத்த 90 ஆண்டுகளில் தேசம் சுதந்திரமானது

இந்த மோதலில் வெள்ளையன் தந்திரமாக ஒரு காரியம் செய்தான், முதலில் இந்துக்களுக்கும் ஆப்கானியருக்குமான மோதலில் உள்ளே புகுந்தவன், அந்த மோதல் மத கலவரமாக தொடர்ந்தால் தனக்கு நல்லது என கண்டான்

அந்த தந்திரத்தில் காய் நகர்த்தினான், விளைவு அவன் கிளம்பும்பொழுது தேசம் மூன்று துண்டுகளாய் உடைந்து போனது

மொகலாய அரசை மட்டும் வீழ்த்தி இந்தியாவினை இந்து தேசமாக அறிவிக்க தொடங்கபட்ட போராட்டம் வெள்ளையன் வருகையால் திசைமாறி பின் இரு இஸ்லாமிய தேசங்களாகவும் ஒரு சமய்சார்பற்ற தேசமாகவும் மாறி போனது

ஆம் இன்றுவரை இந்துக்களுக்கான நாடு இல்லை, அவ்வகையில் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது