2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு
2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு
ஹிட்லர் தன் இறுதிகாலத்தில் இருந்தான், ஆனால் ஜெர்மனிக்குள் புகுந்து அடிக்க நேசநாடுகளுக்கு அச்சம் இருந்தது. என்னிடம் அப்படி பெரிய குண்டு இருக்கின்றது, அதை வீசினால் 1 லட்சம் பேர் காலி, பிரிட்டன் மீது நாளை வீசுவேன், இன்றிரவு வீசுவேன் என மிரட்டிகொண்டிருந்தான்
அவன் தளபதி ஹிம்லரும், கோயபல்சும் ஹிட்லர் சொன்னதை பலமடங்காக பெருக்கி சொன்னார்கள்.
அவன் அக்குண்டை வீசும்வரை காத்திருப்போம் என எதிர்படைகள் காத்திருந்தன, அவனோ மிரட்டிகொண்டே இருந்தான் வீசவில்லை
இறுதியில் அந்த குண்டை ஹிட்லர் வீசும் நேரமும் வந்தது, லண்டன் மீது பறக்கும் குண்டு என வீசினான். பெரும் சேதாரமில்லை
இதுதானா? இதை வைத்துகொண்டா மிரடடினான் என உற்சாகம் பெற்ற படைகள் பெர்லினில் புகுந்தன, ஹிட்லர் ஒழிந்தான்
அப்படி இந்த டெல்லி இந்த தேதியினை ஒத்திவைக்கும் பொழுதெல்லாம் அங்கு ஒன்றுமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது
ஓரளவு விஷயம் இருந்தாலும் மோடி கலைஞரை சந்தித்திருக்க மாட்டார் என்பது விஷயம் அறிந்தவர்கள் சொல்லிகொண்டிருப்பது
ஆக ஹிட்லரின் அஸ்திரம் போல அங்கு ஒன்றுமே இல்லை, எல்லாம் மிரட்டல்
ஆனால் ஒரு தேதியில் அறிவித்துதான் ஆகவேண்டும் , அது புஸ்வானம் ஆகும் அதன் பின்புதான் இருக்கின்றது விஷய்ம். அதன் பின் இங்கு காட்சிகள் நிச்சயம் மாறும்.
ஹிட்லருக்கு நேர்ந்த கதி இங்கு சிலருக்கு அரசியலிலே ஏற்படலாம்.
தமிழிசை கலைஞர் வீட்டுக்கு சென்று ஒரு மாதிரி சிரிக்கும்பொழுதே இந்த ஒத்திவைப்பு வைபவம் நடக்கும் என்று பட்சி சொல்லியது